பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40

உண்டா? அன்றியும் அவற்றுக்குத் தம்மை கண்ட அளவில் மகிழ்வுறுத்தும் தன்மை உண்டா? இல்லையே!

து

ஆயினும் அவற்றில் மயங்கித் திரிகிறீர்களே இது மதியுடைமை தானா? என்கிறார்.

"தேனைக் கையிலே வைத்துக் கொண்டு உப்பு நீர் குடிக்க ஓடித் திரிவது முறைதானா?” என்கிறார்.

சங்கப் புலவர் சொல்வார்,

"தேனருந்த மாட்டாமல் மடலர் சிதைய ஏறிநின்று மீனருந்தும் நாரை” என்று! அத்நாரையின் இயல்பாக இருக்கலாமா நல்லறிவோர் இயல்?

மயக்கும் குடிகளை ஒழிக்க மாந்தனுக்கு வேண்டுவது, மனைவி மேல் காதல், மக்கள்மேல் காதல், பெற்றோர் மேல் காதல், உற்றார் உறவின் மேல் காதல்! இக் காதல் குடிமைக் காதல் - உலக நலக்காதல் - உயிர்நலக்காதல்! இறைநிலைக்காதல்!

இக்காதல் எவர் வாழ்வில் இடம் பெறுகின்றதோ, அவர் நடையில் தடம் பிறழார்! நடையில் நின்றுயர் நாயகர் அவர்! எங்கே இருந்து நினைத்தாலும் இன்பச் சுரப்பாம் இம்மாந்த நேயக் காதல் இருக்கவும் - மாந்த நேயத்தைக் கொல்லும் மது வகையை மாந்தல், மாந்தத் தன்மைதானா?

நெஞ்சத்தில் கூடுகட்டி வாழும் நேயப் பறவைகளாகிய மனையை மக்களை பெற்றோரை

-

அன்பை

-

நண்பை நினைத்து நெய்யாக உருகுகின்றதே நேய மனம்! இதனைக் கள் தருமா? மயக்குவன தருமா?

உயிர்த்துணையைக் கண்ணை மூடிக்கொண்டு நினைத்த போதும், உயிரோவியமாக உள்ளகத்துத் திகழ்கிறாரே! எத்தனை பிள்ளைகள் ஆயினும், அத்தனை பேர்களும் நெஞ்ச நீர் நிலையில் துள்ளி விளையாடும் தோன்றல்களாக உள்ளார்களே; எவ்வளவு முதுமைக் கோடுகள் பதிந்து விட்டாலும் முன்னைப் பொலிவும் வலிவும் முந்து முந்து நின்று பெற்றோர்கள் வனப்பாக வளையமிடுகின்றனரே! நண்பர்கள் முகம் நம்மை விட்டு நகர்கின்றதா? நகரின் நண்பா? நன்றி செய்தோர் நயத்தகு செயல் மறைத்தலும் மறத்தலும் என்ன? 'கொலை' என்பாரே வள்ளுவத் தோன்றல்! இவ்வாறு புறத்துக் காணும் காட்சியும். அகத்துக் காணும் காட்சியும் அழியா இன்பமாய் இருந்தும் அவற்றை மதியாமல் 'மது' 'எமது' என்பாரை என்ன சொல்வோம்!