பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. அறிதோ ற்றியாமை

ஆசிரியப் பயிற்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர். முன்னே பள்ளித் துணை ஆய்வாளராக இருந்தவர். அந்நாளில் அவர் ஒரு பள்ளி ஆய்வுக்காகக் கரிசல் காட்டு வழிவே நடந்து கொண்டிருந்தார். அங்கே களை வெட்டிக் கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம், 'இது என்ன செடி?' என்று வினாவினார்.

களை வெட்டியவர் படிப்பறிவு இல்லாதவர். இவரோ ளங்கலைப் பட்டம், ஆசிரியப் பட்டம், முடித்தவர். களை எடுத்தவர் கல்லாதவர் எனினும் கூர்மையான அறிவினர். அதனால், “நீங்கள் வேட்டி சட்டை துண்டு எனப் போட்டிருக் கிறீர்களே! அவற்றைத் தந்தது இந்தச் செடி” என்றார்.

'ஓ' பருத்தியா? இதனைப் படித்திருக்கிறேன்; இதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதத் தெரியும். ஆனால், பார்த்த தில்லை" என்று சொல்லிக் கொண்டு அக் கல்லா ஆசிரியரிடம் கற்றுக் கொண்டார் கற்ற அறிவாளர். அவர் மா மாந்தர். அதனால் அதனைத் தம் மாணவர்க்கு எடுத்துரைத்தார். வேறொருவராக இருந்தால் தம் அறியாமையை இப்படி வெளிப்படக் கூறியிருக்க மாட்டாரே!

கல்வி நான்கு சுவருக்குள் மட்டும் இல்லை. கற்பிப்பார் நாவில் மட்டும் இல்லை.

எழுதுவார் நூலில் மட்டும் இல்லை!

ஆய்வுக் கூடங்களில் மட்டும் இல்லை!

பார்க்கும் இடமெல்லாம் பல்கலைக் கழகம்!

நோக்கும் இடமெல்லாம் நுண்ணறிவுக் கல்விக்கூடம்!

காலமெல்லாம் பேசாமல் பேசிக் காட்டும் கலைச்

சுரங்கம்!

எது? எது? உலகம்! உலகத்து இயற்கை!