பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

உங்களினும் உயர்ந்த உலக நலங்கருதிய பெருவாழ்வினர் ஆவர்!

போர்ப் பிணக்கில்

-

-

உயிர் நலங்கருதிய

-

இடுகாட்டில் - இன்னல் பொழுதில் எரிநெருப்பில் ஆறாத்துயரில் - பெருகிய சினத்தில்- முறுகிய பொறாமையில் நீங்கள் கொள்ளும் உறுதியினும், உயிர்தளிர்க்கும் உயிரின்பப் பொழுதில் கொள்ளும் உறுதி, மெய்யாகவே சிறப்பானதாம்! சீரிய நலம் செய்வதாம்!

ஆதலால், கூடலின்பத்தில் அறிதோ றறியாமை காணும் நீங்கள் உலக நலம் கருதிய எல்லாவற்றையும் செய்து செய்து அறிதோ றறியாமை கண்டு கண்டு பேராப் பெருநிலைப்பேறு அடையுங்கள் -என்று உணர்த்தும் வகையால், காமத்துப்பாலில் புணர்ச்சி மகிழ்தல் நிறைவில் இவ்வறிவியல் இலக்கணப் பாடலை வைத்தார் என்க.