பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

ஊரே இனமாக வேண்டும்; இனமாக்கலும் ஊர்ச் சான்றோர் கடன்! ஒன்றி உறவாக வாழ்தல் ஊரவர் கடன். அப்படி அமையா அமைக்க முடியா ஊரில் வாழ்வது போல் துன்பம் ஒன்று இல்லவே இல்லை!

ஊமைப் பிறப்புகளாக ஊர் முழுவதும் இருந்தாலும் உவப்பாக வாழலாம். ஆனால், நெஞ்சம் எரிகுழம்பாய், வாய் நிலைநடுக்கமாய், செயல் இடியாய் இருப்பார் இ டையே வாழ்வது வாழ்வா, நொடி நொடிச்சாவா? அத்தகைய ஊரிலும் ஓரன்புத் துணை! உயிர்த்துணை! அந்தத் துணையோடு எரி நெருப்பென்ன, கடுபாலையென்ன, நெடுமலையென்ன, கடும் அலையென்ன எங்கும் செல்லலாம்! அத்துணையும்-உயிர்க்கு உயிராம் அத்துணையும்- 'இரு வருகிறேன்' என்று சொல்லியும் சொல்லாமலும் பிரிந்து போய் விட்டால், அந்தத் தனிமை வாழ்வுக்கு இணை அந்தத் தனிமை வாழ்வு தானே! அதனால்,

"இன்னாது இனனில்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு”

என்றாள் அவள்.

(1158)

ஊர் கெட்டாலும் உறவு விட்டாலும் விடக்கூடாத உயிர்த் துணை, அவளை விட்டுச் செல்லுதல் ஆகாது. அப்படி அவன் செய்தால்...?

அவள் சொல்கிறாள்.....

"நீ செல்லாமல் இரு

ரு

செல்வதாக இருந்தால்.... சென்று திரும்பி வரும்போது நீ எனக்குச் சொல்ல நான் இருக்க மாட்டேன்;

உனக்காக இங்கே உயிரோடு இருப்பார்க்குச் சொல்!

“என் வாழ்வு உன் பிரிவைத் தாங்கி

அதனால் ஏற்படும் அல்லலைப் பொறாது.

உன் பிரிவைத் தாங்கிக் கொண்டு உயிரோடு இருக்க யலாது;

அப்படி இருப்பார் பலர் ஆகலாம்;

அவர்க்கு உன் வரவையும் உன் பொருள் வரவையும்

சொல்லியிரு