பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ்வளம்

-

40

விரும்புகிறார். உயிர்காக்கும் அருளாளர் நிலையில் அப்படி விரும்புகிறார். ஆனால்,

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு

(731)

என்னும் நாட்டை நனவாக்க விரும்பிய நல்லோர் அவர் ஆதலால், வீடும் நாடும் உலகும் ஒருவர்க்கும் ஒன்றற்கும் தாழ்வு உயர்வு அற்ற ஒப்புரவு நிலை ஒன்றனை விரும்பி ஓங்கிய முழக்கமிட்டார் அம்முழக்கங்களுள் தலையாயது அரசுக்குத் தந்தது ஒருமுழக்கம். அது, “நாடென்ப நாடா வளத்தன”. (739) என்பது தன்னிறைவு நாடாக ஆக்காத எந்நாடும் நன்னாடு இல்லை என்பது.

செல்வர்க்கும் ஈகையர்க்கும் தந்த தொரு முழக்கம்

அது, "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்." (225) என்பது பசித்து வந்தோர் பசியை ஆற்றுவது நல்ல ஆற்றலே ஆனால். அதனினும் மேம்பட்ட ஆற்றல், அவர்கள் 'நாங்கள் பசியுடையோம்' என்று கேட்டு வராவகையில் அவர்களே அப்பசியை மாற்றிக் கொள்ளும் வகையில் திறங்களையும், வாய்ப்புகளையும் வழங்குங்கள் என்பது இதன்பொருளாம். தனித்தனி மாந்தர்க் கெல்லாம்; அறிவுப் பிறப்பிக் கெல்லாம் குன்றின் மேல் ஏறிநின்று குறிக்கோள் நெறியாக அறங்கூறும் அண்ணல் உரைத்தது மற்றொரு முழக்கம். இரவார்; இரப்பார்க்கொன்று ஈவர்; கரவாது கை செய்தூண் மாலை யவர் -

என்பது.

1035

"தாம் எவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவு உழைப்பையும் கரக்க (மறைக்க) மாட்டார்; உழைப்பு உழைப்பு என்று வாழ்வதைத்தம் உயிர்க்கடமையாகவும் தம்வழிவழிக் குடும்பக் கடமையாகவும் கொள்வார்; அவர் எவரிடமும் ஒன்றைக்கேட்டு நில்லார், தம்மிடம் எவரேனும் கேட்டு நின்றால் அவர்க்கு இல்லை எனச் சொல்லவும் மாட்டார்” என்பது இதன் பொருள். இம்முழக்கங்கள் செம்முழக்கங்கள்! செவியுளோர், கேட்கும் செல்வராகவும் திகழக் கூறுவதே வள்ளுவம்.

வாழ்வாங்கு வாழ்தல் என்பது வள்ளுவர் நோக்குப் புரிந்துகொண்டு வாழ்தல்! அப்புரிவு, உலக விரிவு ஆவதாக!