பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

255

பிராமணன் பிறரிடமிருந்து பெறுகின்ற உணவு, உடை, பொருள், யாவும் அவனுடைமையை அவன் பெறுவதாகவும், ஏனையோர் அவனுடைமையைப் பெற்றுய்வோராகவும்

இருக்கின்றனர். 1 : 101.

பத்தே வயதுடையவனாயினும் பிராமணன் தந்தைக்குச் சமமாயும் நூறுவயதாகிய சத்திரியனைப் பிள்ளையாகவும் மதிக்க வேண்டியது. வேதம் அறியாதவனுக்கு இடுகின்ற தானம் சாம்பலிற் பெய்த ஆகுதி என வீணாகிவிடும்.

பந்தியில் அமரத்தகாதவன், பிராமணன் புசிப்பதைப் பார்த்தால் அன்னமிட்டவனுக்குப் பலன் வீணாகிவிடும். (மநுதர்ம சாத்திரம் தமிழில் திரிலோக சீதாராம்.) இன்னும் கடுமையும் கொடுமையும் கயமையும் உடையவை மிகப் பல! இந்நெறி தமிழ் மண்ணில் புகநேர்ந்த போதே விழிப்பாக உரைத்து உய்விக்கக் கிளர்ந்த அருளுரை 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது.

அதனை அன்றே போற்றத் தவறிய தமிழ்மண் இன்று அவலங்களுக் கெல்லாம் உறைவாய்த் தத்தளிக்கின்றது. அதனை ஒழிக்க வேண்டும் என்று குரல் தந்தவரும், ஒழியவிடோமெனக் கட்டிப் பிடித்தும் காட்சியாக்குகின்றனர்! பிறப்பு ஒக்கும் என்னும் பெருநெறி பேருலக நெறியானால் அன்றி உய்யாது உலகம்! உய்யவே உய்யாது!

“உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு”

என்பது திருவள்ளுவப் பண்புடைமைத் திருப்பாட்டு!