பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

267

கல்வியைக் காலமெல்லாம் கற்பவர், தம் நலமே, தாமே என்னும் குறுஞ்சிறு வட்டத்துள் அட்டையாய்ச் சுருண்ட வாழ்வினராகக் கிடக்கும் நிலையை அறிவு தாழ்வு உடையவர் என்று பாராட்டுவரோ?

இவற்றால், வள்ளுவக் 'கல்விப் பொதுமை' போலவே ‘கல்விப் பயன்’ பொதுமையும் வள்ளுவர் கண்ட கல்விச் சிறப்பாம்! அதனாலே, நூலை எடுத்த எடுப்பிலே,

66

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்”

எனக் கல்விப்பயனை காட்டினார்.

மேலும், அறிவுடைமையை அடுத்தே குற்றங் கடிதலையும் பெரியாரைத் துணைக்கோடலையும், சிற்றினஞ் சேராமை யையும் தொடர்ந்து வைத்த சிறப்பையும் எண்ணி வள்ளுவர் வழிக் கல்வி கற்றார்தம் பொதுமைப் பயன் புலப்படும்.