பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

அறிதல், காலம் அறிதல், குறிப்பறிதல், செய்ந்நன்றி அறிதல், வலியறிதல் என்பவற்றைச் சொல்வதோடு ஒப்புரவறிதல் என ஒன்றையும் கூறுதல் வள்ளுவர் பொருளியல் மாண்பு புலப் படுத்துவதாம்.

மாரி எவர்க்கும் பொதுவானது தானே!

ஒப்புரவாளன் செல்வமும் அத்தகையதே

என்று அதிகார முதற்குறளில் சுட்டுகிறார். (211) உயிருடையவன் என்பவன் ஒப்புரவாளனே என்று உறுதிப்படுத்துகிறார் (214)

ஒப்புரவாளன் ஊருணி நீர்போலவும், நடுவூர்ப் பழுத்த நன்மரம் போலவும்,

மருந்தாகப் பயன்படும் மாண்மரம் போலவும்,

எவரெவர்க்கும் பொதுப் பயன் செய்வானாய் இருப்பான் என்கிறார். (215, 216, 217) ஒப்புரவாளன் தன் வறுமைப் போழ்திலும் ஒப்புரவுக் கடனாற்றத் தவறான் என்றும், தன்னை விற்றுக்கூடப் பிறர்க்கு உதவிபுரிவான் என்றும் அவன் பரிவியலைப் பகர்கிறார்.

(218, 220).

ஒப்புரவாளனுக்கு வறுமை என்பது இல்லை. அவனுக்கு வறுமையானது பிறர்க்கு உதவ முடியவில்லையே என்னும் ஏக்கம் ஒன்றே என்றும் உரைக்கிறார் (219).

இவ்வாறு நடுவுநிலை நெஞ்சத்தாலும், பெருந்தகைத் தன்மையாலும் அறிவின் விரிவாலும் எவரும் இனிது வாழ வாழும் வாழ்வே ஒப்புரவு என்கிறார்.

ஒப்புரவிலே எடுத்துக்காட்டும் மழை, ஊருணி, பழமரம், மருந்து மரம் என்பவை தனி ஒருவர்க்கோ, ஒரு கூட்டத் தார்க்கோ உரியதாகுமோ? அனைவர்க்கும் பொதுப்பயன் செய்பவை அவையல்லவோ! இவற்றாலேயே பொருள் என்பது பொதுநலம் செய்ய வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்துகிறார். வன்முறை யில்லாமலே தாம் தாமே விரும்பிப் பலர்க்கும் உதவி வாழும் வாழ்வே வாழ்வு என்கிறார்.

இவ்வாழ்வின் தொடக்கத்தில் இல்வாழ்வான் தன் தாய், தந்தை, மனைவி என்பவரைப் பேணிக் காத்தலையும்,

துறந்தார் ஊணற்றிருப்போர் ஊணேற்று வருவார் என்பவரையும்,