பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளில் ஒப்புரிமை

முத்தொழிற் கொள்கை:

285

உலகைப் படைத்துக் காப்பவன் இறைவன் என்னும் கருத்து புறநானூற்றிலே இடம் பெற்றுள்ளது.

“ஓரில் நெய்தல் கறங்க; ஓரில்

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்

புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்

பைதல் உண்கண் பனிவார் புறைப்பப் படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்”!

என்பது அது.

"ஐதேகு அம்மஇவ் வுலகுபடைத் தோனே" என்னும் நற்றிணைக் காட்சியும் அதனைச் சுட்டும்.

உலக நலப்பேற்றை உலகு படைத்தோனுடன் கற்பியாமல், உண்டால் அம்மஇவ் வுலகம்...

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

எனப் பார்த்த புறநானூற்றுப் பார்வையாளரும் பண்டே காணப்படுகின்றார். வள்ளுவர் பார்வையும் இவ்வழிப்பட்டுச் செல்வது என்பதைப்,

"பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்”

என்னும் குறள் தெளிவிக்கும்.

(996)

‘படைத்தல் காத்தல் அழித்தலாகிய முத்தொழிற் பாட்டை வள்ளுவநோக்கு இறையோடு இயைத்ததில்லை' என்னும், அடிப்படையை நோக்குதல் வேண்டும். இவ்விடத்தே ஓரையம் கிளரும். அவ்வையமும் உரையாசிரியர்கள் செய்த உரை வேற்று மையால் கற்பார்க்கு ஏற்படுவதாம். அது, உலகியற்றியான்' எனவரும் சொல்லாட்சி ஆகும்.

இயற்றுதல் - படைத்தலா?

றைவனைச் சுட்டும் கடவுள் வாழ்த்துப் பகுதியில் 'உலகுஇயற்றியான்' என்னும் பெயராட்சி இல்லை என்பது அப் பொருளை விலக்கிவிட உதவுகின்றது. 'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த, வகுத்தலும் வல்ல தரசு' என்பது அரசொடும் இயற்றியானை இணைத்துக் கொள்ள உதவுகின்றது. இனிச் சொன்மரபும் பின்னதையே சார்ந்து உறுதி செய்கின்றது.