பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

"குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண்”

(705)

“உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்ல தவர்"

(406)

“உளரெனினும் இல்லாரோ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்"

(730)

66

“ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்”

(214)

"செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்”

(420)

கோள்இல் பொறியில் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை

(9)

எனச் செயலற்ற பொறிகள் பொறிகளாகா வென்றும், செயலாற்ற வாழ்வு வாழ்வாகாது என்றும் வள்ளுவர் பயில் வழங்குதல் நோக்கத் தக்கன.

தேர்ந்த குணங்களின் பிழம்பாக அமைந்தான் ஒருவன், அக்குணம் பலர்க்கும் பயன்பட வாழாமல் செயலற நிற்பன் எனின், அக்குணங்களை அவன் கொண்டமைக்கு என்னதான் சான்று? இறைமைச் சிறப்பாய் அமைந்தவன் அவ்வழியில் இயங்காதிரான். இருப்பின் அவன் பொறியின்மையாளனினும் புன்மையாளனாவன். என்னென்னின்,

“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி”

என்பது வள்ளுவமாகலின்,

வேண்டா

னிப் பிறவி என்பது என்ன என வினவி இடருற என்பார்போல் “பிறப்பென்னும் பேதைமை” என்றார். பேதைமை நீங்கப் பிறப்பறும்; 'அதுவே அறிதோறும் அறியாமை கண்டு' முழுதுணரும் அறிவுப் பிறப்பாகும். அதனைக் குறித்தே "சிறப்பென்னும் செம்பொருள் காண்பதறிவு" என்றார்.