பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

307

உழைப்பாளர் சிறப்பை உரைப்பதொரு குறளைச் சுட்டி அமைதல் சாலும். அது:

"இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்

(1035)

உழவு என்னும்அதிகாரத்தில் உள்ள இக்குறள் கையால் தொழில் புரியும் அனைவரையும் தழுவிக் கொள்ளும் கருத்தினதாம்.

வினைமேற் சென்ற தலைவன் அதனை இனிதாக முடித்து விரைவில் திரும்பி வருதலை விரும்பிய தலைவி,

66

“வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து”

என்று வாழ்த்தும் வாழ்த்தினைக் கூறி அமைவோம்.

(1268)