பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

இளங்குமரனார் தமிழ்வளம் - 40 40 ஓ

அக்கலத்தையே கரைத்து அழித்துவிடும். வஞ்சத்தால் பொருள் தேடி வைத்தால் அப்பொருள் பச்சைமண் கலத்தில் நீர்வைத்தது போல் தானும் அற்று, கலத்தையும் அழிப்பதுபோல் உடையவனையும் அழித்துவிடும் என்கிறார்.

“சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமட் கலந்துள்நீர் பெய்திரீஇ அற்று."

சலம் - வஞ்சம்; ஏமார்த்தல்

இருக்கச் செய்து.

(660)

-

பாதுகாத்தல். இரீஇ

இவையெல்லாம் செய்ய விரும்பும் செயல் தூயதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வினைத்தூய்மைக் குறள்களாகும்.

வினைத்திட்பம் :

திட்பம் என்பது உறுதிப்பாடு. வினைத்திட்பம் என்பது என்ன என்னும் கேள்வியைத் திருவள்ளுவரே கேட்டுக் கொண்டு விடை கூறுகிறார் :

“வினைத்திட்பம் என்பது ஓரவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற”

இதனால் மனத்திட்பம் என்பதே வினைத் திட்பம் என்று கூறி விடுகிறார். வேறு வேறு திட்பங்கள் எல்லாம் இருப்பினும் அவையெல்லாம் மனத்திட்பம் போன்றவை ஆகா என்கிறார். செல்வம் இருந்தென்ன? செல்வாக்கு இருந்தென்ன?

பதவி இருந்தென்ன? பரிவாரம் இருந்தென்ன? சுற்றம் இருந்தென்ன? சூழல் இருந்தென்ன?

தொழில் இருந்தென்ன? கருவி இருந்தென்ன?

‘அஞ்சுபவனைக் குஞ்சும் வெருட்டும்' என்பது பழமொழி. மனத்தில் உறுதிப்பாடு இல்லாதவனுக்கு எச்சிறு செயலையும் உரியவகையில் செய்து முடிக்க இயலாமலே ஒழியும். மனத் துணிவாளிக்கு எத்தகு இல்லாமை-தடை எதரீடு -நேரினும், அவற்றைத் தகர்த்தெறிந்து எடுத்த செயலை முடித்தே தீர்வான்.

மனத்திட்பம் இல்லாத மாடு வண்டியில் பூட்டிய அளவில்

படுத்துக் கொள்வது இல்லையா?