பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் ஓ

331

மாட்டாமல் இப்படி ஒடுங்கி முடங்கிக் கிடக்கிறாயே நீ என்ன செயல் திறம் உடையவன் என்று நகைப்பாள்

(1040)

என்று உழவு அதிகாரத்தை முடிக்கிறார்.

""

இவற்றுள் இறுதி இரண்டு குறள்களின் பொருள்களும் உழவுக்கு மட்டுமோ உரியவை. எத் தொழிலுக்கும் உரியவை அல்லவோ!

ஒரு தொழிலகத்திற்கு நாளும் பொழுதும் தவறாமல் செல்ல வேண்டும் தானே! கருத்தோடு கண்காணித்தலில் தவறக்கூடாது தானே! வீட்டைமட்டுமன்றி, நாட்டையே காக்கவல்ல தொழிலகம் ஒன்று நமக்கு வாய்த்தும் அதனை நன்றாக முறையாக இயக்காமல் மூடிக்கிடக்கவும், முடங்கிக் கிடக்கவும் விட்டால் அத்தொழிலகமும், அத்தொழிலகப் பொறிகள் எல்லாமும் நகையாவா? கை கொட்டிச் சிரியாவா?

6699

உழவின் சிறப்பும் உலகப் பயன்பாடும் இவ்வாறெல்லாம் இருத்தலால்தான் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" என்று புகழ்ந்தார் வள்ளுவர் (1033)

வையெல்லாம் தொழில் வாழ்வுபற்றித் திருக்குறள் வழியே அறியப்படும் செய்திகளாம். வேறு சில சிதறல்கள் உண்டெனினும் அவைமேலே வரும் 'தரம்' உறவு ப் பகுதிகளில் டம்பெறும் ஆதலால் இவ்வளவில் அமைவோம்.