பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் ஓ

345

சுற்றத்தார்க்கும், அலுவல் சுற்றத்தார்க்கும் பொருந்தியதே ஆகும்.

ஒருவன், ஒன்றன் தலைமையைப் பெற்றிருந்தால் அவன் அப்பேற்றைப் பெற்ற பயன், அவன் தலைமைக்கு உட்பட்ட சுற்றத்தார் அனைவரும் அவனைச் சுற்றியும் சூழ்ந்தும் இருக்கும் வகையில் வேறுபாடற்ற ஒருநிலையில் விளங்குவதேயாகும் என்கிறார் திருவள்ளுவர். அது,

66

“சுற்றத்தால் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்”

என்பது. விருப்பம் நீங்காத சுற்றம் அப்படிச் சூழ்ந்திருக்கப் பெற்றால், எவ்வகையாலும் நீங்காத நன்மைகள் எல்லாம் உண்டாம் என்கிறார்.

சுற்றத்தால் சூழ இருப்பவனுக்கு இன்றியமையாத் தன்மைகள் இரண்டனையும் வகுத்துக் கூறுகிறார் வள்ளுவர். அவை, அவ்வளாவுதல், வரிசை அறிதல் என்பன.

தரமேம்பாட்டுக்கு ‘அளவு' கட்டாயத் தேவை. அதுபோல் உறவு மேம்பாட்டுக்கு அளவளாவுதல் கட்டாயத் தேவை.

அளவளாவிக் கலந்து உரையாடும் வழக்கத்தை ஒருவர் காண்டால் பெரும்பாலான சிக்கல்கள் தலைகாட்டவே காட்டா. உள்ள இறுக்கமும், தனித்து நிற்கும் ஒதுக்கமும், காரணமின்றித் தோன்றும் சினமும், சிலச்சில கரவுகளுமே உயிரன்ன உரிமை உறவுகளையும் கெடுத்து விடுகின்றன.

அளவளாவுதல் மேலையரால் மிக உயர்வாகப் போற்றப் படுகின்றது. அலுவலகத்தில் இருக்கும் போதுதான், அலுவலர்; தொழிலில் இருக்கும் போதுதான், தொழிலர்; மற்றைப் பொழுதுகளில் தோழர், தொண்டர், ஒத்த ஆட்டக்காரர், உழுவலன்பர் என்னும் நிலையர்.

ஒருவர் அலுவலர் என்றால் எப்பொழுதும் எவரிடமுமா அவ்வலுவலர்? மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் உறவினர் நட்பர் அன்பர் என்பார் முன்னரும் அதே அலுவலர்தாமா?

நிலைக்குத் தக மாறி நேயம் செலுத்தவல்லாரே, நிலையில் உயர்ந்து விளங்குபவர் ஆவார்.

அளவளாவுதலில் ஒத்த நிலையராக இருப்பவர், வரிசையறிதலில் மிகவிழிப்பாக இருத்தல் வேண்டும்.