பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

347

'வரிசை அறிதலோ அரிதே! அது நன்கு அறிந்தனை என்றால் புலமையாளிகளிடத்தில் பொதுப் பார்வை பார்த்தலை விட்டொழி என்றார். புலமை திறமை என்பவற்றை மதிப்பீடு செய்யுங்கால் அவரவர் நிலைமை மதிப்பிடப்பட்டுச் சிறப்பித்தல் வேண்டுமேயன்றி, அனைவரையும் ஒத்த பொதுப் பார்வையால் பார்த்தல் ஆகாது. அப்படி இருந்தால் தேர்வு எதற்கு? மதிப்பெண் எதற்கு? தேர்ச்சி எதற்கு? போட்டிகள் எதற்கு? விருதுகளும் வெற்றிப்பாடுகளும் எதற்கெனப் போகிவிடும்!”

பொதுமாந்த நேயம் வேறு; புலமைத் தரமும் திறமும் வேறு எனப் பிரித்து நோக்கும் நோக்கு வேண்டும் என்பதாம்.

பொது வாழ்வில், 'கண்ணோட்டம்' என்பதொரு தன்மை இல்லாமல் கடனாற்றல் கூடாது. இல்லாமல் கடனாற்றின் எண்ணாத விளைவுகளெல்லாம் உண்டாதல் உண்டு.

கைத்தவறு நிகழலாம்; காலத் தாழ்வு நேரலாம்; எதிர் பாராச் சிக்கல் உண்டாகலாம்; குடும்பத் தொல்லை உள்ளே அரிப்பாக இருக்கலாம்; மனங்கலந்து பேசும் இயல்பில்லாத வராய், தம்மொடுக்க முடியவராய், பிறரொருவரால் தூண்டப் பட்டவராய், சிறுசினத்தராய் ஒருவர் இருக்கலாம். உலகம் இத்தகையவர்களை இல்லாமல் இல்லையே. நம்மொடும் இத்தகையவர் இல்லாமல் இல்லையே. நம்மொடும் இத்தகையவர் இல்லாமல் இருப்பர் எனச் சொல்லவும் இயலாதே! இந்நிலையில் அவரவர் நிலைக்கு உருகியும் அமைந்தும் கண்ணோட்டத் தோடு தாட்சணியத்தோடு - நடந்து கொள்ளல் தலைமைக்குத் தனிச்சிறப்பாகும். அதனால் “கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை” என்று பாராட்டுகிறார். “கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலவர்" என்று நொந்து கூறுகிறார். கண்ணோடு இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், மண்ணோடு இருந்து நகராத மரத்திற்கு ஒப்பானவர் எனப் பழிக்கிறார். ஆனால், இக் கண்ணோட்டத்தால் தொழிலுக்கோ, துறைக்கோ குறை வருமாறு ஆகி விடக் கூடாது என்றும் எச்சரிக்கிறார். ஆதலால், “கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

-

உரிமை உடைத்திவ் வுலகு

95

என்கிறார். கருமம் சிதையாமல் என்றதைக் கருதுக.

உறவு, நட்பு, அன்பு, நன்றியறிதல் என்னும் பற்றுமை காரணமாகத் தகுதியில்லாத ஒருவர்க்குத் தகுதியாம் பதவியோ-