பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும் இ

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்”

“அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான்என் றேவற்பாற் றன்று”

என்பவை அவை.

(517)

(515)

349

ஒரு செயலைச் செய்தலில் வல்லான் ஒரவன்; அவனினும் செயல் திறம் மிக்கான் இன்னொருவன்; இத்திறமிக்கார் ஒரு நிறுவத்தின் வைப்பு நிதியம் அனையவர். இவர்கள் நெருக்கமும், அளவளாவலும் அத்திறத்தைக் ‘கல்விக்கு இருவர்' என்பது போல் மேலும்மேலும் கவின்பெறச் செய்யும். ஆனால் அவர்கள் தம்முள் வேறுபட்டு நிற்றலோ, தலைமையோடு ஒத்தும் ஒவ்வாதும் நிற்றலோ அந்நிறுவன வளமாகவும், வாய்ப்பாகவும் அமையாமல் ஒழியும். ஆதலால், தலைமை விழிப்பாக இருந்து செயலாற்ற வேண்டும் என்கிறார்.

“வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு”

என்பது அது.

(519)

ஒவ்வொரு நாளும் தொழில் செய்வாரைக் கண்காணித்தலும் அவர்கட்கு வேண்டுவனவற்றைத் தாமே கருதிப் பார்த்துச் செய்தலும், எப்பொழுதெனினும் காணுதற்கு எளிய வாய்ப்பும், எதனைக் கூறுதற்கும் திறந்த செவியும் உடையவராகத் தலைமை இருப்பின் அவர்கள் மனங்கோணாது செயலாற்றுவர். அவர்கள் மனக்கோணல் கொண்டால் அக்கோணல், உலகின் கோணலாய் அமையும் என்றும் தெரிந்து வினையாட ஏவுகிறார்.

“நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு'

99

(520)

இதில் மன்னன் என்பதைத் தலைவன் எனக் கொள்ளலாமே!

தலைமைக்குரிய தகவில் எல்லாம் தகவானது தம்குற்றம் இல்லாமல் இருத்தல், இருப்பதை உள்ளகம் அறியின் வெளியகமும் அறியும் என உணர்தல்; தலைமைக் குற்றம், அத்தலைமைப் பதவியோடு எண்ணப்படின், அத்தலைமை உயர்வு மலைபோன்றது எனினும் தலையின் இழிந்த மயிரெனக் கொள்ளப்படுதல்; தலைமையிடம் உள்ளகுறை தொழிலரிடம் இருப்பினும் கூட அவர்களும் அத்தலைமைக்கு அக்குணம் ஆகாது என்று பழித்தல் என்பனவெல்லாம் வள்ளுவரால் எண்ணப்படுகின்றன.