பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றுக் கதைகள்

93

என்றான். சோழன் உயர் நோக்கம்தான் என்னே! மைந்தரொடு பகைத்து நின்று வடக்கிருக்கும் போழ்தும் “புதல்வரைப் பெற்று வருக" என்று புகலும் இவன் போலும் உயர் குணத்தோனும் உண்டோ? இத்தகையவன் தன் புதல்வர்களைப்பற்றி என்னென்ன மனக்கோட்டை கள் கட்டியிருந்தானோ?

எல்லாவற்றையும் பாழ்படுத்தி விட்டனரே பழிகாரர்!

பொத்தியார் வேந்தன் கட்டளையை மறுக்கவில்லை. விம்மியபடி எழுந்தார். அப்பொழுது அங்கிருந்தவர்களிடம் சோழன் “அன்பர்களே என் உயிர் நண்பர் ஆந்தையார் இங்கு வருவார் அவருக்கு ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள்” என்றான்.

66

‘ஆந்தையார் வருவது நடக்காத காரியம்; அரசர் வடக் கிருப்பது சோழ நாட்டிலே. ஆந்தையார் குடியிருப்பது பாண்டி நாட்டிலே! இந் நிகழ்ச்சியை எப்படி அறிவார்? அறிவிப்பார்தாம் யார்? எத்துணை நாட்கள் செல்லும்? அப்படியே அறிந்தாலும் உடனே வருவார் என்பது என்ன உறுதி. அவ்வாறே வரினும் வடக்கிருப்பார் என்பது என்ன உண்மை?" இப்படிப் பல வாறாகப் பேசினர் மக்கள். அரசன் பேசினான்:

-

“நீங்கள் எண்ணுகிறபடி ஆந்தையார் பாண்டி நாட்டி னர்தான். இதற்குமுன் - நான் ஆண்டுவந்த பொழுது வராத அவர் இப்பொழுது நான் மாண்டு போகப் போகும் பொழுது- வருவாரா என்ற ஐயம் உங்களுக்கு எழுவது இயல்பே. ஆனால் அவ்வையம் எனக்கு இல்லை. செல்வம் உள்ளபோது என்னை நாடிவராது நின்றார். ஆயினும், யான் அல்லல் உறும் இப் பொழுது நில்லார்; ஓடி வருவார்."

66

இவ்வளவும் கூறியும் ஆங்கிருந்தோர் ஐயம் அகலவில்லை.

'அரசே! ஆந்தையார்மேல் அன்பு மிகக் கொண்டுள்ள உங்கள் பண்பைப் போற்றுகின்றோம். ஆனால் கேள்வி அளவிலே இருப்பதே உங்கள் நட்பு, நீவிரோ அன்றி அவரோ ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததோ பழகியதோ இல்லை. நெருங்கிப் பழகியவர் நட்பே ஆண்டுகள் கழியக் கழிய ஒரு நிலைமையில் நிற்பது இல்லை. இவ்வாறு உலகியல் இருக்க அவர் இந்நிலைமையில் வருவார் என்பதை எப்படி ஏற்பது” என்றனர். பேரறிவுடையவர்களும் இப்படி ஆந்தையார் அன்பு பற்றியும், வருகை பற்றியும் ஐயம் கொள்கின்றனரே என்று எண்ணினான்.