பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டத்தின்

புறநானூற்றுக் கதைகள்

221

டையே புலவர் ஒருவர் ஓடி வந்தார். உலகம் வாழ்வதற்காகவே வாழ்ந்து வரும் உழவர் குடியிலே பிறந்த புலவர் ஓடிவந்தார். தமிழகத்திற்குத் தனிப்புகழ் தந்த புலவர் கோவூர் கிழார்தான் அவர்.

கிழாரைக் கண்டவுடன் கிள்ளி தன்னை மறந்து அவரை நோக்கினான். “வேந்தே! நீ விரும்பியதைச் செய். தடையின்றி நீ விரும்பியதைச் செய். ஆனால் நான் கூறுவதனைக் கேட்ட பின்னர் உன் விருப்பம் போல் செய்.”

"நீ யார்? அதனை நானோ சொல்லவேண்டும்? ஒரு புறாவின் துயரை நீக்குவதற்காகத் தன்னுயிர் தந்த சோழன் வழி வந்தவன் அல்லவா! இரக்கமிக்க பரம்பரை அல்லவா? உன் பரம்பரை!

66

இவர்கள் யார்? நீ நன்கு அறிவாயே! அறிவால் உழுது அதனால் கிடைக்கும் டைக்கும் பயனை உண்ணும் கலைஞர்களது பசியைத் தீர்க்கும் வள்ளல் காரியின் மைந்தர் அல்லரோ!

66

இவர்கள்தான் எந்நிலையர்? இக்கூட்டத்தையும் உன் செயலையும் கண்டு கண்ணீர் சொரிந்து நின்ற, இவர்கள் இவ் யானையைக் கண்டவுடன் அழுகையை விட்டு வியப்புடன் பார்க்கின்றனரே! தம்மைக் கொல்ல வரும் யானை என்பது கூடத் தெரியாதிருக்கும் இச்சிறுவர்களோ உன் பகைவர்?

66

அருள் வேந்தே! உன் விருப்பம் எப்படியோ! அப்படியே செய்” என்றார்.

சோழன், தாழ்த்திய தலையை நிமிர்த்தினான் இல்லை. கொலைக் களத்தை விட்டு அரண்மனையை நோக்கி நடை போட்டான். “வேந்தன் வாழ்க” என்னும் ஒலி எழுந்தது. “அருட் புலவர் வாழ்க” என்னும் ஒலி அதனை விஞ்சியது.

வாழ்நாளெல்லாம் சோழன் வீரத்தால் விளங்கினான்; கொடையால் உயர்ந்தான்; புலவர் பாடும் புகழால் பூரித்தான்; பாவன்மையாற் சிறந்தான்; நண்பர்களால் பொலிந்தான்; வேந்தருள் வேந்தனாய்த் திகழ்ந்தான். ஆனாலும், என்றேனும் ஒருநாள் அடைந்தே தீர வேண்டிய இறப்பை அடையாதிருக்க முடியுமா?

வளவனும் ஒருநாள் ‘காலன்' வாய்ப்படவே செய்தான். சோழன் அரண்மனைகள் பல இடங்களில் இருந்தன. சூழ்நிலை, காலநிலை இவற்றை எண்ணித் தங்குவதற்கு வாய்ப்பாக