பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

இளங்குமரனார் தமிழ்வளம்

5

வாழ்த்தின் நோக்கு பலபல அல்ல! ஒன்றே! அது வாழ்த்துதல் என்னும் ஒன்றே!

கையசைவே வாழ்த்தா? வாயசைவே வாழ்த்தா? கண் ணசைவே வாழ்த்தா? எதுவானால் என்ன?

வாழ்த்துவார் நெஞ்சம், வாழ்த்தப் பெறுவார் நெஞ்சுக்கு நிறைவு செய்வதாய் அமையவேண்டும்! அதுவே வாழ்த்து!

மணிக்கணக்காக வாழ்த்தும் வாழ்த்தில் உண்டாகும் உள்ள உ ருக்கத்தினும், மணித்துளிப்பொழுது வாழ்த்தும் வாழ்த்திலே உருக்கமிக்கு இருப்பது இல்லையா? அதனினும் கண்மணி அசையும் ஓரசைவிலே, உண்மை உருக்கம் வெளிப்பட்டு விடுவது இல்லையா? வாழ்த்தின் மதிப்பீட்டுக்கு நெஞ்சத்து அளவே யன்றி வேறு அளவு இல்லை!

இதோ, ஒரு வாழ்த்து. நெடுங்காலத்திற்கு முற்பட்ட வாழ்த்து. ஆனால், காலத்தை வென்று இன்றும் பசுமையாக விளங்கும் வாழ்த்து.

வாழ்த்துபவன் முடியுடை வேந்தன்.

வாழ்த்துப் பெறுபவன் அவன் குடிபடைகளுள் ஒருவன். வாழ்த்துபவன் போரேர் உழவன்

வாழ்த்துப் பெறுபவன் சீரேர் உழவன்.

வாழ்த்துபவன் மதிலும் கோட்டையும் மாடமும் கூடமும் மலிந்த மாநகராளி.

வாழ்த்துப் பெறுபவன் வயலும் சோலையும் தோட்டமும் துரவும் சூழ்ந்த சிறுகுடியாளி.

இத்துணை வேறுபாடுகள் இருப்பினும் நெஞ்சார்ந்த வாழ்த்துப் பிறக்கிறது.

நெஞ்சுக்கு வேண்டுவது உண்மை. அதனைக்கண்ட இடத்தில் நெஞ்சு, கொஞ்சி விளையாடுவதும் உண்மை!

பெ ருநடை நடந்து சிறுகுடியை நெருங்குகிறான் வேந்தன். அவன் செல்லும் வழியில் முட்ட நிரம்பிய வயிற்றோடு கிட்ட நெருங்கி வருகிறது ஒரு கூட்டம். அவர்கள் அகத்தின் மகிழ்ச்சி