பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

இளங்குமரனார் தமிழ்வளம்

5

ஆனால், அவ்வாறு ஒதுங்கினர் அல்லர் அறிவறிந்த அருட்பெரும் புலமைச் செல்வர்கள்.

"அரசன் ஆயின் என்ன? அவன் செயல் சயல் அடாதது. அவனுக்கோ அவன் நாட்டுக்கோ பெருமை தாராது.

அவனைத் திருத்துதல் அறிவறிந்த நம்கடன்” எனக் கடமையைத் தம் மேல் அள்ளிப் போட்டுக் கொண்டு நயமாகக் கடனாற்றி நன்றாக்கினர். சிக்கல்மிக்க கடமை இது. ஏனெனில்,

'நன்றாற்றல்' என்றுமட்டும் துணிந்து இறங்கிவிட முடியாத செயல்! “பின் விளைவு என்ன ஆயினும் ஆக” என்று முடிவெடுத்துக் கொண்டு செய்யத்தக்க செயல்.

புலவர்கள் சான்றாண்மைக் கடமை போற்றத்தக்கது. அதனினும் போற்றத்தக்கது, அவர்கள் சொல்லை மதித்துப் போற்றிய வல்லாளன் பேகன் செயல்!

இற்றை றை

நடை

நடைமுறையில்

இவ்வாறு அறிவுறுத்தும்

சான்றோர் அரியர். அப்படி ஒரு சான்றோர் துணியின், அவர் உரையைச் செவிக் கொண்டு கேட்கும் ஆள்வோர் இருப்பாரே அரியர் எனின், ஏற்போர் எவர்?

முடிமன்னன் காலத்தில் முடிந்த, காட்சிக்கு எளிமையும் கடுஞ் சொல் இன்மையும் கூட, குடியாட்சிக் காலத்தில் கொள்ளை போகிவிட்டதே! ஆள்வோரிடம் உண்மையை எடுத்துரைப்பதே ஆகாப்பகையாகும் நிலையில், இடித்துரைப் பார் நிலைமை என்னாம்? இந்நிலையிலே தான்,

66

‘அருளாய் ஆகலோ கொடிதே

என்று இடித்துக் கூறிய அந்த உணர்வு எங்கே?

66

"இன்னா துறைவி அரும்படர் களைமே

என்றும்,

66

“வண்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே"

என்றும் ஆணையிட்டுக் கூறிய அந்த உணர்வு எங்கே? என்று ஏங்கும் நிலையில் இற்றை உலகம் உள்ள து.