பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் புலவர் மூவர்

339

சீரழிந்துவிட்டது.

கொடுமைக்கு ஆட்பட்டுச் சிக்கிச் இத்துன்பச் சுழியில் அகப்பட்டுச் சுழல்வதைப் பார்க்கிலும் இறந்துபடுதலே நல்லது. எனக்குத் தக்கது அதுவே." இவ்வாறு டைவிடாது எண்ணினார் சித்திரனார். அவர் வாழ்க்கை கசப்பாகி விட்டது; ஏன்? வேம்பாகவே மாறி விட்டது.

மேலுமோர் எண்ணம்

று

இந்நேரம் மின்னல் போலாக ஓர் எண்ணம் தோன்றிற்று; அழும் குழந்தை, அதனை அணைத்துக் காக்கும் மனைவி; வாழ்வை முனிந்து நொந்து கொண்டிருக்கும் வயது முதிர்ந்த தாய்! இவர்களை எண்ணினார். தம் குறுகிய முடிவிலே தவறு மிக இருக்கிறது என்று நினைத்து.

“என்னா குவர் கொல் என்துன்னி யோரே!”

என்று சிந்திக்கத் தொடங்கினார். வெளிமான் புதை குழிக்குத் தம் கண்ணீர் மலரைச் சொரிந்து விட்டுச் சித்திரனார் புறப் பட்டார், வெளிமான் அரசாண்டிருந்த அரண்மனையை நோக்கி. இளவெளிமான்

வெளிமானுக்குத் தம்பி யொருவன் இருந்தான். அவன் பெயர் இளவெளிமான் என்பது. இவன் வெளிமானைப் போலப் பெருங்குணம் படைத்தவன் அல்லன். புலவர் தகுதியறியும் இயல்பு இல்லாத ஓட்டைச் செவி படைத்தவன். முன்னரே ளவெளிமானைச் சித்திரனார் அறிந்ததுண்டு. ஆனால் அவன் அப்பொழுது இளவரசனாக இருந்தபடியால் தெளிவாக அறிய வாய்ப்பு இல்லாது போய்விட்டது. அண்ணன் போலவே இத்தம்பியும் இருப்பான் என்றே கருதினார். இல்லையேல் இளவெளிமான் அரண்மனைக்குள் சித்திரனார் காலடி வைத் திருக்க மாட்டார்.

தகுதியறியாக் கொடை

இளவெளிமான் சித்திரனாரை வரவேற்றான். எனினும், புலவர் புலமைத் திறத்தை அறிய விரும்பவில்லை. அளவளாவிப் பேசக் கருதவில்லை. ஏதேனும் கொடுத்து அனுப்பி வைப்பதே கடமை என்று கருதினான் போலும்! அதனால் புலவரின் செம்மைப் பண்பினை அறியாதவனாய் ஏதோ ஓரளவு பொருளை எடுத்துக் கொண்டு வந்து தந்தான். புலி பசித்தாலும் புல்லை யுண்ணாதது போல, வந்த பொருளை வறுமை கருதி