பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392

இளங்குமரனார் தமிழ்வளம்

பரிசளிப்பும் மறுப்பும்

5

தலைநகரம் அடைந்த இரும்பொறை பெருங்குன்றூர் கிழாரை மறந்து விடவில்லை. பன்முறை வரவழைத்து அவர் ரையைக் கேட்டு மகிழ்ந்தான். அளவளாவிப் பேசிச் சிறப்புச் செய்தான். புலவர் பொன்னுரைகளைக் கேட்டுத் தலைவணங்கி நின்று தன் வாழ்வில் கொண்டொழுகும் திண்மை கொண்டான். இதன் தன் இடை டையே அவனுக்கொரு வேட்கையும் கிளர்ந் தெழ லாயிற்று. ஒரு நாள் பேச்சின்ஊடே, “புலவர் பெரும! நீவிர் ஈங்கண் வந்து பெருமைப் படுத்தியது குறித்து மகிழ்கின்றேன். அம்மகிழ்ச்சியினால் யான் நுமக்குத்தர விருக்கும் பரிசினைப் பெற்றருள வேண்டும்" என்றான். புலவரோ “யான் உன்னைக் கண்டு மகிழ்ந்து செல்லுவான் வேண்டி வந்தேனே அன்றிப் பாடிப் பரிசு பெறக் கருதினேன் அல்லேன்; சோழன் தந்த வளமே என் சுற்றம் முழுவதும் பல்லாண்டு காக்கப் போதுமானது” என்று கூறி அரசன் தந்த பரிசுப் பொருளை மறுத்தார். “நீவிர் உமக்காக இப்பரிசினைக் கொள்ளீர் ஆயினும் என் வேண்டு தலுக்காகவாயினும் ஏற்றருள வேண்டும்" என்றான் அரசன். அதற்கும் புலவர் செவிசாய்க்காது இருந்தார். குறைவற்ற பொருள் இருக்கும் பொழுது மேலும் ஏன் பொருள் என்று எண்ணினார். இரும் பொறை அவ்வளவுடன் அமையாமல் வறுமைக்கோ அல்லலுக்கோ ஆட்படாதவர்களாக நும்மவர் இருப்பினும் அவர்கள் வியப்படையும் ஒன்றைக் கருதியேனும் இப்பரிசினைப் பெறுக" என்று வற்புறுத்திப் பொற்காசுகள் வழங்கினான்.

66

சேரலைவிட்டு ஊர் சேர்தல்

சேரல் புலவருக்குத் தர எண்ணிய பரிசுகள் பலவாம். ஆனால் புலவர் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தார். ஆனால் அவரைத் திங்கள் பல தன்னுடன் இருந்து செல்லுமாறு வேண்டினான். அறத்தை நிலை நாட்டும் ஒன்றே தம் தொண்டெனக் கொண்ட புலவர் பெருங்குன்றூர் கிழார், சேரன் உரையை ஏற்றுக் கொண்டு அரண்மனையிலே வாழ்ந்தார். சேரனது அன்புடைமையிலும், இன்சொல்லிலும் சுற்றம் தழுவிக் கொள்ளும் சிறப்பிலும், அரசியல் காரியங்களைச் செவ்வையாக நடத்திவரும் அருமைப் பாட்டிலும், அறிவின் மாட்சியிலும் ஈடுபட்டுப் பெரிதும் மகிழ்ந்தார்.