பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

இளங்குமரனார் தமிழ்வளம்

5

பயிராக இருக்கும்போதே - களிற்றைச் சுற்றித் திரிய விட்டு விட்டால்?" என்று வினாவில் நிறுத்தினார் னாவில் நிறுத்தினார் சொலல் வல்ல புலவர் பெருமான்.

"அவ்வளவும் சிறிது பொழுதில் அழிந் தொழியும்; யானையின் பசிக்கும் அஃது உணவாகாது” என்றான் அறிவுடை நம்பி. புலவர் தொடர்ந்தார்.

66

ஆமாம்! மா அளவு அன்று, மாபெரும் நிலமாகவே இருக்கட்டுமே! யானை மட்டும் கட்டுக் காவல் இன்றி நுழைந்து தின்னத் தொடங்கினால் போதும்! அனைத்தும் கெட்டொழியும். யானை யாவது நிறைந்த பயன்பெறுமா? அதன் வாய்க்குள் செல்லும் உணவைப் பார்க்கிலும், காலால் மிதிபட்டு மண்ணோடு மண்ணாகிக் கெடுவதே மிகுதியாகும். அதன் மிதிப்பிலும், நசுக்குதலிலும், அசைப்பிலும், ஆரவாரத்திலும் கெடாப் பயிர் இருக்க முடியுமா?”

66

'முடியவே முடியாது” என்றான் நம்பி.

முடிப்புரை

66

இவ்வுண்மையை அறிவுடைய வேந்தன் உணர வேண்டும். உண்மையாக உணர்ந்து, உள்ளத்தே கொண்டால் நாடு நலம் பெறும்; கோடி கோடியாகச் செல்வம் பெருகிக் குவிந்து மன்னனுக்கும் மக்களுக்கும் நன்முறையில் பயன்படும். ஆனால், அரசன் இம்முறையினை அறியாது, அறநெஞ்சம் சிறிதும் இல்லாத அரசியல் சுற்றத்தார்களுடன் கூடி இருந்து, இரக்கம் என்னும் ஒரு பொருளை எண்ணாமல் மக்களை அலறவைத்து, வரிவாங்குவதை மேற்கொண்டால், யானை தானும் உண்ணாமல், வளத்தையும் கெடுத்தது போல், அரசன் தானும் பயன் பெறாது நாட்டையும் கெடுத்தவன் ஆவான். அவன் நாடு ஒன்று மட்டுமோ கெடும்? தீய அவ்வேந்தனின் செயல் உலகைக் கெடுக்கவும் தவறாது. இதனை அரசனாய நீயும், உன் சுற்றமாகிய இவ்வவையினரும் நன்கு அறிந்து செயல்படுவீர்களாக' என்றார் பிசிராந்தையார்.

சொல்லிய வண்ணம் செயல்

அறிவுடை நம்பி, ஆன்றவிந்து அடங்கிய சான்றோராம் ஆந்தையார் உரையில் தன்னை மறந்து அரியணையில் சாய்ந்து இருந்தான். அவையோர் முகத்தில் ‘உயிர்க்களை' இல்லை. புலவர் பொன்னுரை நன்றாக வேலை செய்யத் தொடங்கியது. சொல்லும் சொல்லை, வெல்லுஞ் சொல் இல்லாதவாறு சொன்னார் அல்லரோ புலவர்!