பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

89

கொண்டு நாட்டின் எல்லையைக் கடந்து சென்றனர்! அப் பெண்ணின் பெருமை இன்றும் அங்கு மறக்கப்படவில்லை! அந்நாள் பெண்டிர் நாளாகக் கொண்டாடப்படுகிறது!

பெண்ணின் பெருமையைச் சங்கப் புலவர் ஒருவர்

கூறுகின்றார்:

“நிழலின் நீங்காஎன் வெய்யோள்'

“நிழல் எவ்வாறு உருவைவிட்டு நீங்காதோ அவ்வாறே என்னைவிட்டு நீங்காத என் விருப்புக்குரிய மனைவி" என்று பாராட்டுகிறார்.

பாவேந்தரோ,

‘இரட்டைக் கிளவிபோல் பிரியா வாழ்வினர்”

என்கிறார்.எவரை? ஆயிரம் பிறைகண்ட ஓர் இனிய இரட்டையரை, ரட்டைக் கிளவியாகக் காண்கிறார்.

கட கட; மட மட;

சல சல; பள பள;

இவை இரட்டைச் சொற்கள். இவற்றைப் பிரித்துக் கூறுவ துண்டா? கூறினால் பொருள் உண்டா?

பெண்ணின் பெருமையை விரிவாக அறிய வேண்டுமா? திரு. வி. க. வின், 'பெண்ணின் பெருமை'யில் தோய வேண்டும்! ஏனெனில் தென்றல் தந்த தென்றல் அது!