பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

109

விட்ட சமயம், இருட்டாகி விட்டது. இருட்டு வேளையில் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்வது சட்டப்படி தவறு. உடனே வீட்டு உரிமைக்காரன் தவறு.உடனே காவல்காரர்கள் சிலருடன் வந்து விட்டான்.

தன்னுடைய பொருள்கள் அந்தக் கைவண்டியில் இருக்கக் கூடுமென்றும், நாங்கள் தப்பித்துக் கொண்டு வெளிநாடு செல்ல முயல்வதாகவும் எங்களைத் தாறுமாறாகப் பேசினான். அவ் வளவுதான். ஐந்து நிமிடத்திற்குள் இருநூறு அல்லது முந்நூறு பேருக்கு மேற்பட்ட ஒரு கூட்டம் எங்கள் வீட்டு முகப்பில் கூடிவிட்டது. படுக்கைகள் திரும்பவும் வீட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. மறுநாள் பொழுது விடிந்த பிறகுதான் அவற்றை நாங்கள் விற்பனைக்கு அனுப்ப முடிந்தது.

இங்ஙனம் எங்கள் தட்டுமுட்டுப் பொருள்களை விற்று எல்லாக் கடன்களையும் பாக்கி இல்லாமல் தீர்த்துவிட்டோம். பிறகு தான் என் அருமைக் குழந்தைகளுடன் இரண்டு சிறிய அறைகளுள்ள தற்போதைய இடத்தில் வந்து குடியேறினோம். வாரத்திற்கு ஐந்தரைப் பொன்வாடகை. இந்த இடத்தில் அன் போடு வரவேற்கப் பட்டோம்.

ஆனால் இந்தச் சில்லறைத் தொல்லைகள் என்மன உறுதியைக் குறைத்து விட்டன என்று நீங்கள் கருத வேண்டாம். நான் மட்டும் தனித்து நின்று இந்தப் போராட்டத்தை நடத்த வில்லை என்பதை நான் அறிவேன். ஒரு சில நற்பேறு பெற்ற வர்களிலே நான் ஒருத்தி. நான் பேறு பெற்றவள்.

ஏனென்றால் என் கணவன் என் வாழ்க்கையின் மூலவர் என பக்கத்தில் இன்னமும் இருக்கிறார்.

ஒரே ஒரு செய்திதான் என்னை வாட்டி எடுக்கிறது என் நெஞ்சத்திலிருந்து குருதி பீறிட்டுக் கொண்டு வரும் படி செய்கிறது அஃது என்னவென்பீர்களோ, அவர், என் கணவர் சில்லறைத் தொல்லைகளுக்கெல்லாம் உடன்பட வேண்டியிருக்கிறதே என்பதுதான்” காரல் மார்க்கசு-வெ. சாமிநாதர் 120 -123

இதை எழுதியவர் அறிஞர் காரல்மார்க்கசின் உயிருக்கு உயிராகிய துணைவியார் சென்னிமார்க்கசு.

66

இந்த அழகியை மணப்பவன் பேறு பெற்றவன்” என ஊரவர் பாராட்டுப் பெற விளங்கிய செல்வக்குடித் தோன்றல் சென்னி.