பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்

6. நல்ல மக்களாக

கணவன் மனைவி என்னும் நிலையில் இருப்பாரைத் தந்தை தாய் என்னும் உயர்நிலைக்கு ஏற்றியதுடன், பெற்றோர் என்னும் பெரு நிலையாம் ஒரு நிலைக்கு உயர்த்துபவர்கள் மக்கள் ஆவர்.

குடிபடை

மக்கள் என்பார் குடும்ப அளவில் முதற்கண் பேசப்படுவர் எனினும், அவர்களே வளர்ந்த நாளில் நாட்டின் உறுப்புகள் ஆறனுள் முன்னிரண்டுமாகிய ‘படைகுடி’களின் உரிமை . யாளரும் ஆவர்.

நன்மக்கள்

மூளை வளமும் நெஞ்ச வளமும் ஒருங்கே கொண்டவர்களே வீட்டு நலத்திற்கும் - நாட்டு நலத்திற்கும் - உலக நலத்திற்கும் உரிய வகையால் பயன்படுவர் என்னும் தேர்ந்த தெளிவால்,

“அறிவறிந்த நன்மக்கள்”

என்றும் (61)

“பழிபிறங்காப் பண்புடை மக்கள்’

என்றும் (62)

வகுத்துக் கூறினார் வள்ளுவனார்.

மக்கள் வளம்

ஒரு நாட்டுக்குக் கிடைக்கும் இயற்கை வளங்கள் சிறந்தனவேயாம். மலைவளம், காட்டுவளம், கடல் வளம், ஆற்றுவளம் மண்வளம் என்பன பெயரளவால் ஒவ்வொன்றாய் இருப்பினும், ஒவ்வொன்றனாலும் கிட்டும் ஆயிரம் ஆயிரமாம்.

வளவகைகள்