பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் ஆராய்ச்சி

1

131

நாணுடைமையே மாந்தர்க்குச் சிறப்புடைமை என்பதை, ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு

என்கிறார்.

(1012)

பழிக்கு நாணுதல் என்னும் ஒரு குணம் வாய்த்து விட்டால், அவன் உயர் மாந்தன் என்பதற்கு வேறென்ன வேண்டும்?

மக்கள் என்றும் மாந்தர் என்றும் சுட்டிக்காட்டி வள்ளுவர் வழியில் கூறப்பட்ட தொகுப்பு

உரைத்த ஈதாகும்.

பண்பாட்டின் பண்பாட்டின்

மக்கள் நிலை வகை வேறாகலின் இப்பொது வகைச் செய்தியில் துறை பற்றிய சிறப்பியல் செய்திகள் இடம் பெற்றில. சிறப்பு நிலை வகையில் அவை இடம் பெறும்.

குறளாயத் தந்தை, குறள் நெறிக் காவலர்,

நம்மறை கண்ட நம்பி,

வாழ்வாவது வள்ளுவ வாழ்வே என

வாழ்ந்து காட்டி வானுறையும் தெய்வமாகி விட்ட

இந் நினைவு வரிசைப்

பெருமகனார் வேலா. அரசமாணிக்கனார்

பெற்றோர்க்குப் பெருஞ்சிறப்பும், பிறவிக்குப் பெருஞ்

சிறப்பும் தந்தவர் ஆவர்.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தால் காணப் படும்.

(114)