பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

135

களவில் பரவியுள்ளமை காணக் கூடியதே ஏனெனின், விருந் தோம்பல், இனியவை கூறல், நன்றியறிதல் என்பன வெல்லாம் அன்புடைமை வழிவந்த தொடர் வரவுகள்.

ம்

உலகில் அன்புடைமை உள்ளமட்டும், விருத்தோம்பல் இருந்தே தீரும்; இனியவை கூறல் வெளிப்பட்டே தீரும்; நன்றியறிதல் இருந்தே தீரும். அன்புடைமை என்பது ஒரு, முக்காலி' எனின், இம்முன்றும் அதன் முக்கால்கள். முக்கால்களுள் எது முதன்மைக்கால்! முக்காலுள் எக்காலுக்கும் முதன்மை ல்லை. எல்லாமும் முதன்மையானவையே; ஒன்றினில் ஒன்று முதன்மையானவையே. அவ்வாறே விருந் தோம்பல், இனியவை கூறல், நன்றியறிதல் என்பனவும், ஒன்றனில் ஒன்று சிறந்தனவே. ஏனெனில், இம்மூன்றனுள் ஒன்று குறை யினும் குறைவே ஆதலால்.

விருந்தோம்பல் பண்பு உலகளாவிய சிறப்புப் பெறு வானேன்? 'விருந்து' என்பது உறவினர்க்குச் செய்யப்படுவது அன்று. தொடர்பு இல்லாத, புதியவர்க்கும் பெரியவர்க்கும் துறவியர்க்கும் செய்யப்படுவதாகும். அவ்விருந்தால், நன் மக்கள் பெருமக்கள் - சார்பு உண்டாகும். அவர்கள் நல்லுரையும் தாடர்பின் நிறைவும் வழிகாட்டுதலும், குடிவழிக்கு நீளப் பயன்படும்.

ன்

பெரியவர்கள் வரும்போது, வீட்டுப் பெரியவர்களுடன் குழந்தைகளுக்கும் அறிமுகமாகித் தொண்டு செய்யவும், நல் லொழுக்கமும் நல்லறிவும் பெற்றுக் கொள்ளவும் ஆகிய சூழல், தேடிப் போகாமல் தானே தேடி வந்து நிற்கும்.

குடும்பங்களில் உண்டாகியிருந்த சிறிய மனத் தாங்கல்கள், பெரியவர்களைப் பேணும் வாய்ப்பு நேரும் போது அகன்று

ஒழியும்.

குடும்பத்தோடு வாழ்வார் பிறருக்காக வாழும் பெரு மக்களைப் பேணுமுகத்தால், அவர்கள் செய்யுள் பொது நலப் பணிக்குத் துணையாம் பேற்றைப் பெற்றுப் பிறவிப் பயனையும் இல்வாழ்க்கைப் பயனையும் பெற்றவர் ஆகின்றனர்.

உழையாச் சோம்பர்க்கும், வெட்டியாகத் திரிவார்க்கும் தரும் உணவு விருந்தாகாது. போலித் துறவியர்க்கும் ஏமாற்றும் வஞ்சக வேடத்தவர்க்கும் 'புண்ணியம் கிடைக்கும்' என்னும் பொய்ம் மயக்கத்தால் தரும் உணவும் விருந்தாகாது. அவை ‘பசிக்கு உணவு' என்னும் அளவிலே பயன் பெற்றவர் நலமாக