பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

1

137

ன்சொல் சொல்லுவார் அடையும் பயன்களை மெய்யாகவே அறிவார், ஒரு நாளும் வன்சொல் வழங்கார்!

அன்பு, விருந்தைத் தந்தால், விருந்து இன்சொல்லைத் தன்னொடு சேர்த்துக் கொண்டு, வந்து சேர்கிறது; பின் செய்ந் நன்றியறிதலுடன் உலாக் கொள்கிறது. ஒருமை மும்மையாகி, மும்மை ஒருமையாகும் சீர் இது.

நன்றி; செய்ந்நன்றி

நன்றியறிதல் வேறு; செய்ந்நன்றி அறிதல் வேறு; நன்றி யறிதல் ஒழுக்கம் பற்றியது; செயந்நன்றி அறிதல் உதவி பற்றியது. நன்றியறிதல் பொதுநலம் கருதியது.

'பொய்யான்', 'திருடான்’, ‘ஏமாற்றான்', 'ஒழுக்கந் தவறான்' என, ஒருவனின் நற்பண்பாட்டை மதிப்பது நன்றி அறிதல். தனக்கு ஊண், உடை, உறையுள், உற்றுழி என உதவி செய்தலை நினைந்து போற்றல் செய்ந்நன்றி அறிதல்.

அறிதல்

நன்றி கூறல் என்றோ, செய்ந்நன்றி கூறல் என்றோ சொல்லாமல் நன்றியறிதல் என்ற வள்ளுவ நெஞ்சம் செயல்பாட்டை விரும்பும்

சால்லளவில் ஒழியாமல்

நெஞ்சமாகும்.

செய்ந்நன்றி வகை

செய்நன்றிகள்பல வகைய. அவை, முன்னர் எவ்வுதவியும் தமக்குச் செய்யார்க்குச் செய்யும் நன்றி, காலத்தால் செய்யும் நன்றி, பயன் கருதாமல் செய்யும் நன்றி, தாம் வறுமைப் பட்ட நிலையிலும் செய்யும் சிறிதளவு நன்றி என்றெல்லாம் பகுத்துக் காண்கிறார் வள்ளுவர். அதன்மேல், எந்நன்றியானால் தான் என்ன? அந்நன்றியைப் பெற்றார் தன்மையைப் பொறுத்தே அதன் அளவு அமைகின்றது என்கிறார். (101-105).

ஒன்றில் ஐந்து

எடிசனார் மயங்கிக் கீழே விழுந்தார். விழுந்த இடம் சாலையோரச் சாய்க்கடை. அவ்வழியே சென்ற ஒருவன் மேலே தூக்கி, முகத்தில் நீர் தெளித்தான். தேநீர் வாங்கிக் குடிக்கக் கொடுத்தான்; தெளிவுற்றார் எடிசனார். போய உயிர் மீண்டது. அப் புத்துயிர்க்குத் தந்தையாவான் எவன்? மயக்கம் போக்கிய மாண்பினன் அல்லனோ!