பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

1

139

களுக்குஉட்பட்ட ஆட்டுமந்தை நிலைதான், ஆதலால் பண் பால் வளர வேண்டிய இல்வாழ்விலேயே நடுவு நிலை உண்டாகி விடவேண்டும் எனக் கண்டார் வள்ளுவர்.

மக்களைச் சமநிலைப் பார்வை பாராமல், ஒரு சார்புப் பார்வையைப் பெற்றோர் பார்த்தால், அவர் எத்தகு செல்வம் உடையவர் எனினும், அன்புடையவர் எனினும், மேற்பதவியர் எனினும், குடும்ப ஒற்றுமை காணார். குடும்பப் பிளவுக்கு வழிவகுத்தவரே ஆவர். சிறிதளவு காட்டும் ஓரச்சார்பும், குடும்ப அன்பைக் குலைத்துப் பாழ்படுத்தத் தவறாது. ஆதலாலேயே, வாழ்வியல் தெளிந்த வள்ளுவப் பெருமகனார், இல்வாழ்வான் போற்றிக் கொள்ளத்தக்க பண்புகளுள் ஒன்றாக நடுவு நிலையை வைத்தார்.

பெருங்குடும்பத்திற்குத் தலைவராகிய ஒருவரிடம் நான்கு பேர் தங்கள் பிணக்குகளைச் சொல்ல வருவர். நம்பிக்கை கொண்டும் வருவர். ஒரு முறை ஓரஞ்சாரச்சொல்லி விடின், ஊர்மதிப்பை ஒழிந்து விடுவார். அவரோடு அவ்வொழிவு நிற்குமா? அவர் வழியினர்க்கும் அப்பழி தொடரும். நடுவுநிலைச் செம்மை போற்றின், அப்புகழும் வழிமுறைக்குத் தொடரும்.

இல்வாழ்வானுக்குக்கூட முறையற்ற வழியில் பணம் வரும் சூழல் உண்டாகலாம். 'எவ்வழியால் பணம் வந்தால் என்ன? எனக்கு வேண்டுவது பணம்தானே' என்றால், அச்சிறு தொகை உண்டாக்கிவிட்டுச் செல்லும் பெருங்கேட்டை, அளவிட முடியாது. அதனால், “நன்மையே தரும் என்றால் கூட; நடுவு நிலை தவறி வரும் ஆக்கத்தை அப்பொழுதே ஒதுக்கிவிடு என்றார் வள்ளுவர் (113).

உள்ளவற்றை எல்லாம் செலவிட்டு, உள்ள வருவாய்த் தொழிலையும் விட்டு, வறுமை நெருப்புக்கு ஊடே நின்ற போதும், ‘கப்பல் விடாதீர்' எனக் கைக்கூலியாகத் தந்த ஓரிலக்கத்தையும், காறி உமிழ்ந்து வீசி எறிந்தார் வ. உ. சிதம்பரனார். அந்நடுவு நிலை வரலாற்றுலக வாழ்வாகி விட்டதன்றோ!

குடித்துக் கெட்டான்! அடித்துக் கெட்டான்; ஆடிக் கெட்டான்; கூடிக் கெட்டான் என்றால், பழித்துப் பேசும் உலகம்; நடுவு நிலை போற்றும் நல்ல நெஞ்சத்தான் ஒருவன், வறுமையுற்றான் என்றால் அவன் பண்பு நலம் பதின்மடங் பாராட்டப் படுமேயன்றிப் பழிக்கு இடமாகவே ஆகாது.

கு