பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம் 6

தீயதாக இருந்தாலும், மற்றை நற்சொற்கள் அனைத்தையும், அவன் அதுகாறும் செய்த நற்செயல்கள் அனைத்தையும், அவன் காண்ட நல்லொழுக்கம் அனைத்தையும் ஒரே நொடியில் கெடுத்து விடும் என்றார். இதனினும் நாவடக்கத்தை எவ்வாறு வலியுறுத்துவது?

ஒன்றானும் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.

(128)

மனைவியிடத்தும், மக்களிடத்தும் தன் பெற்றோடரித்தும் அடக்கம் பேணி, நாவடக்கம் போற்றி வாழ்வான் உற்றார் உறவிடத்தும் சுற்றம் சூழலிடத்தும் மற்றை அயலிடத்தும் அவற்றைப் போற்றிக் கொள்வான். ஆதலால் இல்லறத்தான் அடக்கம் போற்றல் ஒழுக்கமாகும்.

அடக்கச் சிறப்புக்கு ஒரு சான்று; சரக்குந்தில் (லாரி) எத்தனை ‘பொதி’ பாரம்? அப்பாரத்தைத் தாங்குவது எது அடக்கி வைக்கப்பட்ட காற்றுத்தானே! அக்காற்று வெளி யேற்றி விட்டால், பாரம் தாங்கி ஓடல் என்னாம்? ஒழுக்கம்

அடக்கத்தை L டமாகக் கொண்டு வளர்வது வளமாக விளங்குவது-ஒழுக்கம். ஒழுக்கம் என்பது என்ன?

வானில் இருந்து ஒழுகும் நீர் ஒழுக்கே ‘ஒழுக்கு’ எனவும், ‘ஒழுக்கம்’ எனவும் பெயர் பெற்றது பின்னர் அவ்வொழுக்குப் போல, மாசற்று ஒழுகும் ஒழுக்கம், அல்லது நடத்தை, ஒழுக்கம் எனப்பட்டது.

இவ்விரு பொருளும் காண்பார் காணுமாறே வள்ளுவர். “வானின் றமையாது ஒழுக்கு

என்றார் (20).

நீர் என்பதன் வழி வந்ததே 'நீர்மை' என்னும் தன்மை. நீர் நிலத்தை ஊடறுத்துச் செல்லுதலால் பெயர் பெற்ற ஆறு, வழி, என்பவை நீர்வழிக்கும், நீர்மை வழிக்கும் பொருந்தியமை யால்தான், நல்லாறு நல்வழி, ஒழுக்காறு இழுக்காறு, போகாறு ஆகாறு முதலாகப் பல ஆட்சிகள் எழுந்தன. ஆகலின், ஒழுக்கம் மனத் தூய்மையில் இருந்து உண்டாகும் நடத்தையாம்.