பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

சும்மா

இளங்குமரனார் தமிழ்வளம் 6

இருக்கிறார்களே! சும்மா சும்மா திரிகிறார்களே! சும்மாவே பேசுகிறார்களே! ஒருநாள் இரு நாளா? காலம் காலமாகவே! சும்மா இருக்கும் ‘சுகத்’தை, இந்த நாடு போல் எந்த நாடுதான் காண முடியும்?

பயனறிந்த அறிவாளர் பயனில சொல்வாரா? (198)

வாழ்வுத் தெளிவுடையவர் வறுஞ்சொல் சொல்வாரா? (199)

ஒருவருக்குள்ள உறுப்புகளில் பயனில்லாத ஒன்று உண்டா? உதிர்ந்து போகும் முடியும், நீண்டால் வெட்டப்படும் நகமும் கூடப் பயனற்றவை அல்லவே! அவ்வாறாகவும் பயன் உறுப்புகளாலேயே அமையப் பெற்ற ஒருவன், பயனற்ற சொல்லைச் சொல்வானானால் அவன் ஒருமகனா? பதர்! (196) தீவினை அச்சம்

L

பயனில சொல்லலின் பதின் மடங்கு கேடு, பயனில செய்தல். அதனினும் பன்மடங்கு கேடு, தீவினை செய்தல். ஆதலால் தீவினை செய்தலை நினைக்கவும் அஞ்சுதல் நல்லோர் இயல்பாகும்.

தீ, தீமை பயக்குமா? தீயவை தீமை பயக்குமா?

தீ, தேடிப் போய்த் தீமை செய்வது இல்லை!

தீயவன் தேடிப் போய்த் தீமை செய்தல் கண்கூடு.

தீ செய்யும் நன்மைகள் எண்ணற்றவை. ஆனால், தீயவன் செய்யும் தீமையால், அவனுக்குக் கூட ஏன், அவன் குடும்பத் திற்குக்கூட நன்மை இல்லை. ஆதலால், தீயினும் அஞ்ச வேண்டு வது தீயவற்றுக்கேயாம்.

“தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்

என்றார் திருவள்ளுவர் (202). இதனைத் ‘தீயவே தீய பயத்தலால் தீயவே தீயினும் அஞ்சப்படும்' என்றே பாடம் இருந்திருக்கும் என்பார் அரசஞ் சண்முகனார்.

தீயவை செய்தவர் கெடுவரா? தப்பாது கெடுவர். நிழல் எப்படி அவரைத் தொடர்கிறதோ அதுபோல் அவர் தீய செயலும் தொடர்ந்து அவரை அழித்து விட்டே அவரோடு ஒழியும்.