பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி 1

173

ஆசை இருக்கும் உள்ளம் அசையும். அதனை அற்ற உள்ளம் அசையா நிலை எய்தும். அவ்வசையாப் பெரு நிலையே பேரா இயற்கையாகும்.

66

'ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.’

உலகியக்கும் பேரா இயற்கை போல், அவாவற்றோனும் பேரா இயற்கைப் பெருநிலை எய்துவான். அப்பேரா இயற்கைக்கு எவ்வாறு விருப்பு வெறுப்பு, வேண்டுதல் வேண் டாமை, நலம் பொலம், வாழ்வு வீழ்வு இல்லையோ அவ்வாறே அவாவற்றானும் ஆவான்! அந்நிலையே வீடு பேறு! தன்னையும் தன் உடலையும் தன் உயிரையும் பற்றிய பற்றுகளை எல்லாம் ஒருங்கே விட்டதே விடுதலை ஆகிய வீடு பேறு!

L

துறவர் இறந்த பின்னர்த்தான் வீடு பேறா? இல்லை! 'அவாவறுத்தலே வீடு பேறு' என்ற பின்னர், 'இறந்த பின்னரா?" என்பதற்கு இடமே இல்லை. “அவாவற்றார் என்பார் வீடு பேறு உற்றார்” என்பதே வள்ளுவம்.

ஒரு முதியர்; ஊர் அறியோம்; பேர் அறியோம். ஓர் ஊர்க்கு வருகிறார். ஊர் மடத்தில் தங்குகிறார். அவர் பார்வை அடுத்தே உள்ள ஊர்க் கிணற்றில் பட்டது.

ஊர்க்கிணறு. குடிநீர்க்கிணறு! சுற்றிலும் நின்று பெண்டிர் நீர் இறைத்தனர்; கிணற்றைச் சூழவும் நீர்த்தேக்கம்; சேறு; சகதி; ஈ, கொசு, இருக்கை! அவற்றின் ஊடே நின்று கொண்டேதான் நீர் இறைத்தனர்.

முதியவர் எண்ணம் பளிச்சிட்டது. மடத்தில் வழக்கம் போல் படுத்தும், அரட்டையடித்தும் ஆடியும் கொண்டிருந்த சிலர் அப்பொழுதும் இருந்தனர். இளைஞர் ஒருவரிடம், "ஒரு மண்வெட்டி கிடைக்குமா?” என்று கேட்டார்.

முதியவர் அயலூரார்; அவர் அதனைக் கேட்டதும் வியப்புற்ற அவர், “எதற்கு!' என்றார். கிணற்றைச் சூழ்ந்து சேறும் சகதியும் நீருமாக உள்ளது. நிலத்தைத் தோண்டி நீரை அப்புறப்படுத் தினால் தூய்மையாகும் என்றுதான் கேட்டேன் என்றார். நல்ல வேளை! அந்த இளைஞர் மண்வெட்டி கொண்டு வந்தார்.

கிழவர் பார்வை கிணற்றுச் சூழலில் சென்றது; அங்கே பூச்செடிகள் சில, நீரற்று வாடி வறண்டு போய்க் கிடந்தன. தேவையுள்ள இடத்திற்கு நீர் இல்லை; தேவையில்லா இடத்தில்