பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ்வளம் 6

நீர் கட்டிக் கிடக்கிறது. இரண்டையும் ஒப்புரவு செய்தால் ருபாலும் நலமாம் என எண்ணினார்.

கிணற்றில் இருந்து செடிப்பக்கம் வாய்க்காலாக வெட்டத் தொடங்கினார். மண்வெட்டி தந்த இளைஞர் முதியவர் திட்டத்தையும் வேலையையும் பார்த்துவிட்டு உதவ முன் வந்தார். அவர் தோழர்களைத் தூண்டினார். மேலும் மண் வெட்டி, கூடை, கடப்பாறைக் கம்பி ஆகியவை வந்தன. பொழுது சிறிதுதான்! எவ்வளவு பெரிய வேலை! எவ்வளவு நாளாக ஏறிட்டுப் பாராமல் கிடந்த வேலை!

பெரியவர் அயலவராகத் தோன்றினார் அல்லர்; ஊரவர் ஆனார்; உறவர் ஆனார்.

பள்ளிப் பிள்ளைகள் சிலர் வந்தனர்; படிப்பைக் கேட்டார்; புத்தகங்களோடு வரச் வரச் சொன்னார்; தாமே வீட்டுப்பாட ஆசிரியர் ஆனார்; செல்லச் செல்ல இரவுப் பள்ளி ஆசிரிய ரானார் முதியர்க்கு; விளையாட்டு ஆசிரியரும், தாயரும் ஆனார் குழந்தைகளுக்கு!

நோயா, அவரே மருத்துவர். பொருட்காவலா, அவரே காவலர்; சண்டையா, மனக்கசப்பா, தகராறா-அவரே தீர்ப்பாளர்!

அவரில்லாமல் ஊரில்லை என்ற அளவுக்கு ஆனார். ரவலராக வந்த அவர், ஒவ்வோர் இல்லத்து விருந்தராகவும் விளங்கினார். ஊரின் அமைதிக்குக் கொள்கலம் அவரே என ஊர் மெச்சியது!

பூ

முடிவு ஒருநாள் இல்லாமல் முடியுமா? கட்டுவிட்ட பூ உதிர்வது என உயிர் நீத்தார். ஊரே திரண்டது; அடக்கம் ஊர் காணா அடக்கமாயிற்று! ஆண்கள் அனைவரும் தங்கள் குடும்ப முதல்வர் போல எண்ணி மொட்டையிட அமர்ந்தனர். ஒரோ ஒருவர் முடியிறக்குபவர்; நூற்றுக்கு மேல் வரிசை! ஊர் நாட் டாண்மை எழுந்தார். ஊரை வணங்கினார். ஊர் முழுமையின் சார்பில், தாம் ஒருவரே மொட்டை போட உரிமை தர வேண்டும் என்றார். நிலைமைக்குத் தக ஊரிசைந்தது.

L

முதியவர் எதுவும் கொண்டு வரவில்லை! பேரையும் ஊரையும் விட்டு வந்தார். அப்படியே காலமெல்லாம் எப்பற்றும் அற்றுத் தொண்டு செய்தார். அவர் மறைவா வீடு பேறு! அவர் தொண்டே வீடு பேறு.

இது நிகழ்ந்த சான்று! வள்ளுவத்துறவர் அவர்!

·