பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

“செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்

வளிதிரிதரு திசையும்

வறிது நிலைஇய காயமும் என்றிவை

1

185

சென்று அளந்து அறிந்தோர் போல என்றும்

இனைத்து என்போரும் உளரே

(புறம். 30)

என்பது. இதனைப் பாடியவர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர் முதுகண்ணன் என்பது பேரறிஞர் என்பதாம். இதன் பழையவுரை:

செஞ்ஞாயிற்றினது வீசியும். அஞ்ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும், காற்றியங்கும் திக்கும், ஓர் ஆதாரமும் இன்றித்தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லபட்ட இவற்றை ஆண்டு ஆண்டுப் போய் அளந்து அறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையன என்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர்” என்பது.

ஐம்பூதத்து இயற்கையும் அவற்றின் பண்பு கெடாமல்

அகத்தேயும் இருப்பதை,

“மண்திணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலை இயதீயும்

தீமுரணியை நீரும் என்றாங்கு,

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்

வலியும் தெறலும் அளியும் உடையோய்”

என்பதால் அப் புறநானூறே காட்டும் (2). இதனைப் பாடியவர் முரஞ்சியூர் முடி நாகரையர் என்பார். இதன் பழைய உரை:

66

அணுச் செறிந்த நிலனும், அந்நிலத்தின் ஒங்கிய ஆகாய மும், அவ்வாகாயத்தைத் தடவி வரும் காற்றும், அக்காற்றின் கண் தலைப்பட்ட தீயும், அத்தீயொடு மாறுபட்ட நீருமென ஐவகைப் பட்ட பெரிய பூதத்தினது தன்மை போலப் பகைவர் பிழை செய்தால் அப்பிழையைப் பொறுத்தலும், அப்பிழை பொறுக்கும் அளவல்ல ஆயின் அவரை அழித்தற்கு உசாவும்