பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ்வளம் 6

உசாவினது அகலமும், அவரை அழித்தற்கு ஏற்ற மனவலியும் சதுரங்க வலியும், அவ்வாற்றால் அவரை அழித்தலும், அவர் வழி பட்டால் அவர்க்குச் செய்யும் அருளும் உடையோய்" என்பது. தொகுப்பு

இங்குக் கூறியவற்றால் ஐம்பூதத்தால் அமைந்த உலகும், அவ்வுலகுபோல் ஐம்பூதக் கூட்டால் அமைந்த உடலும், அவ்வைம்பூத இயல்பொடு பொருந்தி அறிய ஐம்பொறிகளும், அவ்வைம் பொறிகளால் அமைந்த ஐம்புலங்களும், அவ்வைம் புலங்களின் வழியால் அமையும் மெய்யுணர்வும் ஆகியனவும் அம்மெய்யுணர்வாளர் உலகத்து இயற்கையை உள்ளவாறு அறிவோர் என்பதும், அவ்வுலகியற்கையே ஊழ் என்பதும், அது ஆக்கமும் கேடுமாம் இருமைத் தன்மை உடையது என்பதும், அதனை வெல்லும் நிலையும் அது வெல்லும் நிலையும் காணக் கூடுவனவே என்பதும், உலகியற்கையாகிய ஊழறிந்தவர் வழியே உலகியல் பாதுகாப்பு உண்டு என்பதும் அறியலாம். வானிலை

காலையும், மாலையும், கடும்பகலும், நள்ளிரவும் கூட வெப்பும், வெப்பக்காற்றும், மழையும், மழைக்குறியும், புயலும் மூட்டமும், அலையெழுச்சியும், நிலநடுக்கவும் இன்னவாம் அறிவிப்புகளை வானொலிகளும், இதழ்களும், தொலைக் காட்சிகளும் ஓயாமல் ஒழியாமல் பரப்புவானேன்? அஃது ஊழியல் உரைத்து உய்யக் கொள்ளும் கொள்கையேயாம். 'தலைவிதி அதுவே' என்னின் இவர் ஏன் இவ்வெட்டி வேலை செய்கிறார்? பயனில் சொல் ஒருவரிடம் கூறுவதும் பதர்த்தனம் என்றால், கோடி கோடிப் பேர்க்கு வேலை கெடக் கூறுவது எத்தகு பதர்த்தனம்!

திருவள்ளுவர் கண்ட “ஊழ்” அதிகாரம், பழந்தமிழ்ப் பொருள் மரபு மாறாமல் தான் அமைந்துள்ளதா? இயற்கை நிகழ்ச்சி, முறைமை என்னும் வகைகளில் தான் செல்கின்றதா? ஆம்!

குறளையும் பொருளையும் அறிந்தால் தெளிவாகிவிடுமே; "ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி

வளஞ்சேரத்தக்க ஆக்க இயற்கை உண்டாயின், உறுதிப்பாடு உண்டாகும்; அதனைப் போக்கும் இயற்கை உண்டாயின், சோம்பல் உண்டாகும்.