பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

1

189

வேண்டும். அதிலும் குடும்ப அளவில் நிற்கும் இல்லறத்தாரினும் அவர்க்குக் காவற்கடமை பூண்ட அரசுக்கு உலகியற்கையும் அதன் ஆக்கக் கேட்டு நிலையும் அறிதல் இல்லையேல் காவற் கடன் செவ்விதின் செய்ய இயலாது.

66

காவல்

என்னும் ஊர்தியை இயக்கும் ஆட்சியன் தெளிவும் தேர்ச்சியும் உள்ளவனாயின் ஊறுபாடு இல்லாமல் அவ்வூர்தி உரிய வழியில் செல்லும். அவன் அவை இல்லாதவன் ஆயின் அவ்வூர்தி மாறான சேற்றில் அழுந்தி மிகப்பல துன்பங் களை மேலும் மேலும் உண்டாக்கும்" எனப் புறநானூற்று ஆட்சியாளன் ஒருவனே இதனைத் தெளிவிக்கிறான். அவன் தொண்டைமான் இளந்திரையன் என்பான்.

வள்ளுவர், ஆட்சியாளனுக்கு இவ்வூழறிவு இன்றியமை யாதது எனக்கண்டதால் அறத்துப்பால் இறுதியில் பொருட்பால் தொடக்கத்தின் முன் வைத்தார். ஊழறிய வல்லார் மெய்யுணர்வு மிக்கோர் ஆகலின் நிலையாமை, துறவு மெய்யுணர்வு, அவா வறுத்தல், ஊழ் என அடைவு செய்தார். அதனைத் தனிப்படுத்தி ஊழியல் என ஓரியல் ஆக்கல் அவர் முறைக்கு ஒட்டாததாம்.

இனிப்பொருட்பாலிலே ஆட்சிக்கு அச்சாணியாம் அமைச்சன் பற்றிக் கூறும் வள்ளுவர், அவன் செயற்கை விதிகளை எத்தனை எத்தனைதான் அறிந்தவனாக இருப்பினும், இயற்கை நிலை களையும் மிக நன்றாக அறிந்தவனாக இருத்தல் வேண்டும் என்று சுட்டியதை முன்னார்க் கூறப்பட்டது. அது,

“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்’

என்பது.

ஊழறிவின் தேவை

(637)

மாந்தர் வாழ்வின் நலமும் கேடும், இயற்கையின் நலத்திலும் கேட்டிலும் பொருந்தி இருப்பதால், ஆக்கமாக்கிக் கொள்ளுதல், கேடு தவிர்த்தல் என்பவற்றுடன் தற்காப்புக்கு வேண்டும் விழிப்புணர்ச்சி கொண்டிருக்க இவ்வூழறிதல் வேண்டுமாம்.

“என்னதான் இருந்தாலும் ஊழில் வலியதே இல்லையே; அதனை வெல்ல எதுவும் கூடாதே என்ற அளவில் அமைந்தால், ‘அவ்வூழ்வீழறிவு மாந்தர் ஊக்கத்தைக் குறைத்துவிடுமே' என்று தோன்றும். அவ்வாறு தோன்றுதலும் கூடாது' என்றே ‘ஆள் வினையுடைமை' என்பதோர் அதிகாரம் வைத்தார்.