பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு

ஊழ் என்பதற்குப் பழநூல்களின் வழியே அறிய வரும் பொருள்கள்:

முறைமை

ஊழ்மலர் ஒழிமுகை-முறைப்பட மலர்தலை ஒழிந்தமுகை

மலைபடு 130

புறம் 125

ஊழின் உருமிசை-முறையே இடிமுழக்கம்-நற் 364 ஊழ்மாறு பெயர-முறை முறையாக ஒன்றற்கு ஒன்று மாறுபட உருகெழுதாயம் ஊழின் எய்தி-அச்சம் பொருந்தின தன் அரசவுரிமையை முறையாலே பெற்று -பட்டினப் 227

பல்லூழ்மின்னி-பன்முறைமின்னி

-அகம். 175

ஊழ்செய்து இரவும் பகலும் போல்வேறாகி-இரவும் பகலும் போலே முறைமை செய்து வேறாய்

ஊழிறந்து-முறைமையைக் கடந்து

-

கலி.223

-மலைபடு. 263

கிளிகடி மரபின ஊழ் ஊழ் வாங்கி-கிளியோட்டும் முறைமையினை யுடையவற்றை முறையே முறையே வாங்கி

-குறிஞ்சி. 44

உந்துவளி கிளர்ந்த ஊழ் ழ் ஊ ஊழ் ஊழியும்-காற்றுத் தோன்றிய முறை முறையாகிய ஊழிகளும்

-பரி. 2

'ஊழல்' என்பது முறைகேடு என்னும் பொருளில் வழங்கும் நாட்டு வழக்கை அறிக.

மலர்தல்

ஊழுறுமலர் நன்கு மலர்ந்த மலர்

-அகம். 398

-ஐங்குறு. 368

ஊழ்கழி பன்மலர்-மலர்ந்து காம்பினின்று நீங்கின பலபூ