பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. குறளாயத் திருமண முறையும்

விளக்கமும்

1. மணமக்களை ஒருங்கு அமரச் செய்தல்

புத்துடை அணிந்து, மாலையுடன் மாப்பிள்ளையும் பெண்ணும் மணமேடைக்கு வந்து, மங்கல விழாவுக்கு வந்துள்ள பெருமக்களைக் கை கூப்பி வணங்குதல்.

மணமகன் மண இருக்கையில் வலப்பாலும், மணமகள் மணமகனுக்கு இடப்பாலும் அமரச் செய்தல்.

இல்லறம் என்னும் ஊர்தியை, ஒருமுகமாகத் தாங்கி இழுத்துச் செல்லும் பூணிகளைப் போன்ற ஒருமுக அமர்த்தம் இது. எதிராட்டும் இகலாட்டும் போராட்டும் அன்று இல்லறம். விளையாட்டும் அன்று இல்லறம். ஒருமுக அன்பும் ஒருமுகச் செயலாக்கமும் பற்றியது என்பதைக் குறிப்பது இவ்வொரு முகம் வொருங்கிருக்கை.

குடும்பத்தைக் காக்க வந்த குலவிளக்கு குடிவிளக்கு மண மகள்! அதனால், அவ்விளக்கை என் நெஞ்ச விளக்காக வைத்துக் காப்பேன் என்பதற்குச் சான்றாக அவளை அவனுக்கு அமர்த்தல்.

டப்பால்

அன்பு வாழ்வு சிறக்க ஆண்மையும் ஆற்றலும் வேண்டும் என்பதற்குச் சான்றாக அவளுக்கு வலமாக அவனை அமர்த்தல்.

ஆண்மையும் பெண்மையும் இணைதலால் இயல்வதே உலகம் என்பதை மெய்பிக்கும் ஒரு முக இருக்கை இது.

குடும்பத்தின் அடிப்படை அலகு ஆணும் பெண்ணும் கூடியமர்ந்த வழக்கே என்பது வள்ளுவம். அவ்வின்ப நிலைக் களத்தே எழுப்பும் மாளிகையே இல்லறம்!

2. செம்பொருள் நுகர்வு

அறியாமை இருள் அகல, அறிவுச் செம்பொருட் காட்சி

வேண்டும்' என்பது வள்ளுவம்.