பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

1

201

பெற்றோர் ஆகிய இருபால் பெற்றோரையும் மணமக்கள் தனித் தனி மலர் தூவி வணங்கி வழிபடச்செய்தல்.

மகவைத் தந்தவர் தந்தை; அதனைக் கொண்டு ஆகி இருந்தவர் ஆய்! கருவை உருவாக்கித் திருவாக்கித் திகழச் செய்த உயிர்க்கொடை' வழிபாடே, பெற்றோர் வழிபாடாம்.

மணமக்கள் தங்களை இத் திருக்கோலம் காணச் செய்யும் அளவும் அவர்கள் பட்ட பாடுகள் எத்தனை எத்தனை! அவர்கள் பயன் கருதாமல் செய்த-காலத்தால் செய்த-செய்யாமல் செய்த- பேருதவிகளுக்கு ஒப்பாய மாறுதவிகள் உளவோ? உளவோ? அவற்றை எண்ணி, அவர்களைத் தங்கள் கண்ணின் மணிகளாகப் போற்றுவோம் என்பதன் உறுதி மொழியே இவ்வழிபாடு!

முதுமை என்பது மீள் குழந்தை நிலை! அந் நிலையில் போற்றும் போற்றுதலே, தாம் குழந்தையாய் இருந்த நாளில் போற்றிய போற்றுதலுக்கு ஓரளவு ஒப்பாவது. அதனை வலி யுறுத்துவது வள்ளுவம்.

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை'

99

என்னும் இல்வாழ்க்கை முதல் முழக்கம் தந்தை, தாய், துணைவி ஆகிய மூவரையும் போற்றுத லேயாம்.

7. உறுதிமொழி ஏற்று ஒப்பமிடுதல்

இந்த ஆண்டு, இந்த மாதம், இந்த நாள், இந்த மாவட்டம் இவ்வூர் இப்பெற்றோர்க்கு மகனாகிய இப்பெயருடைய யான், இந்த மாவட்டம், இவ்வூர் இப்பெற்றோர்க்கு மகளாகிய இப் பெயருடையவரைச் சான்றோர் முன்னிலையில் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு, என்றும் ஒன்றாகி உடனாகி வாழ்த லென உறுதி மொழிந்து ஒப்பமிடுகின்றேன் என மணமகன் உறுதி மொழிபடித்து ஒப்பமிடுதல்.

அவ்வாறே மணமகளும் உறுதிமொழிந்து ஒப்பமிடுதல்.

மணவிழா நடத்துநர், முன்னரே தனித்தனி உறுதி மொழி களை எழுதி வைத்துக் கொள்ளல்; படித்துக் கூறச் செய்தல் அல்லது படிக்கச் செய்தல்.