பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இளங்குமரனார் தமிழ்வளம் 6

8. முன்னிலைச் சான்றோர் சான்றொப்ப மிடுதல்

மணவிழாவுக்கு வந்துள்ள பெருமக்களில் ஒருவரை முன்னிலையாளராகத் தெரிந்து மணமக்கள் பெற்றோர் கருத்துக் கேட்டு அவர்கள் குறிப்புப்படி-அமரச் செய்தல்.

அவர்கள், மணமக்கள் உறுதிமொழி படித்து ஒப்பமிட்ட பின்னர், அதன் மேலொப்பமாகச் சான்றுக் கையெழுத்து வைத்தல்; முகவரியும் எழுதுதல்.

சான்றோர்களின் முன்னிலையில் விழா நடத்துதலே உ றுதியும் ஒப்பமும் ஆம் எனினும், அதன்மேல் இவ்வெழுத்துச் சான்று என்றும் வைத்துப் போற்றும் சான்றாகவும் இருந்தலால் போற்றிக் கொள்ளத் தக்கதாம்.

9. திருப்பூட்டல்

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு”

என்னும் திருக்குறளை மும்முறை கூறி, சான்றோர் வாழ்த்துடன் வந்த திருநாணை அல்லது விரலாழியை அணிவித்தல் திருப்பூட்டாகும்.

விழா நடத்துநர் திருநாணை எடுத்து வாழ்த்தி, மணமகன் கையில் தந்து மணமகளுக்கு அணிவிக்கச் செய்தல்.

விரலாழி எனின் மணமகனும் மணமகளும் ஒருவருக் கொருவர் அணிவிக்குமாறு முன்னின்று வழிநடத்துதல்.

மாலையிட்டு மணக்கும் மணமாயின், அவ்வாறே மண மகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் சூட்டுமாறு வழி காட்டுதல்.

10. மாலை மாற்றல்

மணமக்கள் கழுத்திலே அணிந்திருக்கும் மணமாலை அப்படியே இருக்கத் திருப்பூட்டு நிகழ்கிறது. மாலை மாற்றுக் கென, நறுமணமிக்க இருசிறு மாலைகள் தனியே வைத்திருத்தல் வேண்டும். அவற்றுள் ஒன்றை மணமகன் கையிலும், ஒன்றை மணமகள் கையிலும் எடுத்துத் தந்து, மும்முறை ஒருவருக் கொருவர் மாற்றி, மாற்றி அணிந்து கொள்ளச் செய்வித்தல் ம்மாலை மாற்றாகும். மும்முறை மாற்றுதலால் மணமகன் முதற்கண் அணிந்திருந்த மாலை, நிறைவில் மணமகள் மாலை