பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிப்பெருமை

திருக்குறள் ஆராய்ச்சி

1

LO

5

புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தால் தான் என்ன? அக்குடும்பப் பெருமைக்குத் தக்கவாறு கல்வியறிவு பெறாமல் இருந்தால் அப்பெருமைக்கு உரியவர் ஆகார். மதிப்பற்ற குடும் பத்தில் பிறந்த ஒருவன் என்றாலும் அவன் கல்வியிற் சிறந்தவனாக இருப்பானேயானால் அவனே உயர்ந்தவனாகப் புகழ்மிக்க குடும்பத்தவராலும் பாராட்டப்படுவான் (409).

நல்லார் வறுமை

கல்வியறிவில்லாதவரிடமும் செல்வம் சேர்ந்திருத்தல் உண்டு. அச்செல்வம் அவனுக்கோ பிறருக்கோ நன்மை செய்வ தாகாது. மாறாகத் தீமையும் செய்வதாக அமையும். நல்லவர் களிடத்துள்ள வறுமையைக் காட்டிலும், கல்லாதவர் இடத் துள்ள செல்வமே துன்பம் தருவதாகும். ஏனெனில், நல்லவர் பட்ட வறுமையால் பிறர்க்கு உண்டாகும் நலங்கள் உண்டா காமல் தடைப்படும் அவ்வளவேயாம்! ஆனால் கல்லாத் தீயோன் செல்வமோ பலரும் கேடடைவதற்கே வழி செய்யும் (408). அறிவின்மை

இல்லாமையைப் பார்க்கிலும் கொடுமையானது என எதைச் சொல்வது? அவ்வில்லாமையே இல்லாமையினும் கொடியது ஆகும்' என்றவர் திருவள்ளுவர் (1041). அவரும், அறிவில்லாமையை எண்ணும் போது, அப்பொருளில்லாமை இல்லாமை ஆகாது எனக் கண்டார். அதனால், இல்லாமை களுள் எல்லாம் தலையாய இல்லாமை அறிவு ‘இல்லாமையே; மற்றை இல்லாமைகளை உலகோர் இல்லாமைகளாகக் கருத மாட்டார்' என விளக்கினார்.

“அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்ன இன்மையா வையா துலகு

(841)

ஒரு தந்தையும் தாயும் தம் மக்களுக்குத் தேடி வைக்க வேண்டியது பொருட் செல்வமன்று; அறிவுச் செல்வமே என்று திட்டவட்டமாகக் கருதினார். அதனால், அறிவுடைய சான்றோர் அவையில் தம் மகனை ஒருவனாக இருக்க வைப்பதே தந்தையின் (தாயின்) கடமை என்பதை வலியுறுத்தினார் (67).