பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ்வளம்

6

குறளாயத் திருமண முறையின்

தனித்தன்மைகள்

குறளாயத் திருமண முறை, எளிமையானது; இயல் பானது; இனிமையானது; சிக்கனமுமானது; அதே பொழுதில் சீர்த்தியால் ஓங்கியது!

குறளாயத் திருமண முறை, இறை நம்பிக்கையுடன் ன் இணைந்தது; அதே பொழுதில் கண்மூடி வழக்கத்தை ஒப்பாதது. குறளாயத் திருமண முறையை, எக்குடிப் பிறப்பினரும்

நடத்தலாம்.

ஏனெனில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் பெருமுழக்க வழியது அது.

குறளாயத் திருமண முறையை, ஆண்பால், பெண்பால் எனப் பால் வேறுபாடு இன்றி எவரும் நடாத்தலாம். பண்டைத் தமிழர் கொண்ட முறைமைப்படி (அகம் 86, 136) பெண்டிரே முன்னின்று நடத்தின் தனிப் பெருமைக்குரிய தாம். ஏனெனில் 'பெண்ணே பெருமை உடைத்து' என்பது வள்ளுவம்.

குறளாயத் திருமண முறை, சமயங் கடந்த சால்பினது; இனங்கடந்த, மொழி கடந்த விரிவினது; ஆர்வமுடையார் எவரேனும் இம்முறையை நடாத்தலாம்; நடாத்துவிக்கலாம். ஏனெனில் ஒருசமய, ஓரின, ஒருமொழிக் கட்டு அற்றது வள்ளுவ

உலகம்.

குறளாயத் திருமண முறை, இயற்கை வழிபாட்டாளர்க்கும் நம்பா மதத்தர்க்கும் விலக்கானதன்று. வள்ளுவக் காதல் கொண் டார் வாழ்வியல் காதலர் அல்லரோ அவர்!

L

குறளாயத் திருமண முறையைத் தம் தம் தாய் மொழியில் பெயர்த்து நடாத்தவும் செய்யலாம். ஏனெனில், வள்ளுவ அகல் வட்டம் வையகப் பரப்பையெல்லாம் தழுவுவது.