பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இளங்குமரனார் தமிழ்வளம் 6

விடிவு நல்விடிவு ஆயிற்று! வீடு தங்கியது; உறுதி நிறைந்தது; இழந்தவை படிப்படியே நிறைந்தன, அச்செய்ந் நன்றி அறிதற் சிறப்பு, கொடுத்தவர் -கொண்டவர் ஆகிய இருவ ரொடும் நின்றதோ? நிற்குமோ? வழிவழியாக மக்கள் மக்கள், மக்களின் மக்கள் எனப் பாராட்டிக் கொண்டாடும் பெருமைய தாயிற்று. இத்தகைய வழிவழி நட்பே பழைமை என்பதாம். இதுவே செய்ந்நன்றியறிதலில், சொல்லப்படும்.

66

'எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு

என்பதாம் (107). தமக்கு உண்டாகிய கொடிய துயரைத் துடைத் தவர் நட்பினைச் செய்ந்நன்றி அறிந்தவர் வழிவழியாக வரும் தம் குடிப் பிறப்பிலும் எண்ணுவர் என்பது இதன் பொருளாம்.

பழமை என்பது என்ன என்பதை அருமையாக விளக்கு கிறார் வள்ளுவர். அது, “கெடாஅ வழிவந்த கேண்மை” என்பது. இடையறவு படாமல் தொடர்ந்து வந்த நட்பு என்பது இதன் பொருள் (800)

வள்ளுவர் கூறும் 'பழமை'ச் சிறப்பு வருமாறு;

பழமை

பழமை என்று சொல்லப்படுவது எது என்றால் அது, வழி வழியாக வருகின்ற உரிமை நட்பை அழித்து விடாததே ஆகும் (801)

நட்பு என்பதோர் வடிவுக்கு வாய்த்த உறுப்புகளாக இருப் பன உரிமைச் செயல்களே. அச்செயல்களுக்குச் சுவை சேர்ப்பவ ராக இருத்தல் சான்றோர்க்குக் கடமையாகும் (802).

உரிமையாக நண்பர்கள் செய்யும் செயலைத் தான் செய்த தாகக் கொள்ளா விடில், வழிவழியாய்ப் பழகிய நட்பு என்ன பயனைச் செய்வதாகும்?

“பழகிய நட்புஎவன் செய்யும், கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை?”

6

(803)

நண்பர்கள் தம் மனம் வருந்துமாறு ஏதேனும் செய்து விட்டனர் எனினும், அறியாமல் செய்தனர் என்றோ, உரிமைப் பெருக்கால் செய்தனர் என்றோ கொள்ளுதல் வேண்டும்! ஏனெனில் பழமைச் சிறப்புடையவர் அத்தகு சிறுமையை அறிந்து செய்ய மாட்டார் என்பது தெளிவு. ஆதலால்,