பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி - 1

235

இல்லார், துறவுக் கோலம் காட்டி ஏமாற்றுதல் தப்ப முடியாத் தீமைக்கெல்லாம் இடமாகி விடும். ஆதலால்,

“நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்”

என்றார் (276). அத்தகையர் மனத்தது மாசானவர் என்றும், மறைந்து ஒழுகும் தன்மையர் என்றும் குறிப்பிடுகிறார் (278). அத்துறவரின் கூடா ஒழுக்கம் அவரைத் தேடிச் சென்றார்க்கும் நம்பிக் கொண்டார்க்குமே தீமை பயக்கும். ஆனால் கூடா நட்போ நாமே தேடிக் கொள்வதாய் நம்மோடு இரண்டறக் கலந்து விட்டதாய்த் தீமை செய்வது.

பால் வெள்ளைபோல் தெரிவதே ‘சுண்ணாம்பு' வெள்ளை! பால் வெள்ளைபோல் தெரிவதே 'பாலிடால்' வெள்ளை! பால் வெள்ளைபோல் தெரிவதே ‘அரளிப்பால்' வெள்ளை! பால் என இவற்றைப் பருகினால் என்ன விளைவாம்!

பாம்பும் தேளும் கூடத் தேடி வந்து தீமை செய்வது இல்லை? தன்னுயிர்க் காப்புக்காகத் தன்னச்சம் உண்டாதலால் தான் அவை கடிக்கின்றன. ஆனால் கூடாமல் கூடியிருந்து கூட்டிக் கொண்டு போய்க் கழுத்தறுத்து விடுமே கூடாநட்பு.

கொல்லர் பட்டடையிலே வலுவான பெரிய இரும்புப் பட்டடை உண்டு. அடிக்க வேண்டும் பொருளை அதன்மேல் வைத்தே சம்மட்டியால் அல்லது கூடத்தால் அடிப்பர். பட்டு தல்-அடித்தல், அடை-அடைக்கல். அடிப்பதற்குத் தாங்கலாய் அமைவதே பட்டடை. அப்பெயரே ஆகுபெயராய்த் தொழி லகப் பெயராயிற்று.

கூட நட்பினர், கொல்லர் உலைக் களத்துப் பட்டடைக்கு ஒப்பானவர் என்கிறார் திருவள்ளுவர்.

தன்மேல் வைத்த பொருளைத் தாங்குவது போல் உள்ளது பட்டடை. அது தாங்குதலா? இல்லை. மற்றொன்று தாக்குவ தற்குச் சீரான, சரியான இடமாக இருந்து, சதப்புதற்கு உதவு கின்றது அது. உள்ளத்தொடு பொருந்தாதவர் நட்பும் அப்படிப் பிறரொருவர் வந்து அழிப்பதற்கு வழிசெய்து கொடுப்பதாகவே அமையும்.