பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இளங்குமரனார் தமிழ்வளம் 6

நட்புக்கு ஒரு நற்சான்று, பாரியும் கபிலரும். பாரி குறுநில மன்னன்; கபிலர், பெரும்பாவலர்; இருவரும் உயிரொத்த நண்பினர்.

பாரி, வேந்தர் சூழ்ச்சியால் இறந்தான். உடனிறக்க எண்ணிய கபிலர் பாரியின் மகளிர் இருவரைக் காக்கும் கடமைக் காக உயிர் தாங்கினார். தம் கடமையை ஆற்றிய அளவில் அமையாமல் பாரியை இல்லா உலகில் வாழ விருப்பம் இல்லா ராய்; பெண்ணையாற்றின் இடையே இருந்த பாறையில் ஏறித் தீ மூட்டிஅதில் பாய்ந்து இறந்தார். இது கல்வெட்டுச் செய்தி! உயிர் நட்பின் சான்று இது!

சீனக்கன் என்பான் வள்ளல்; பொய்யா மொழியார் புலவர்; இருவரும் உயிரொத்த நண்பர்.

ஒரு நாள் பள்ளியறையில் இருந்து நெடும் பொழுது உரையாடினார்; புலவர் அங்கேயே கண்ணயர்ந்து விட்டார். அவரை எழுப்பாமல் தன் கடமை மேல் சென்றான் சீனக்கன்.

வீட்டுக் கடமை முடித்துப் பள்ளியறைக்கு வந்த சீனக்கன் துணைவியார், அவனே படுத்திருக்கிறான் என்று எண்ணி அக்கட்டிலிலேயே படுத்தார். சற்றே கழித்து வந்த சீனக்கன் துணைமேல் ஐயங் கொண்டான் அல்லன்! புலவன் மேல் வைத்த நம்பிக்கை இழந்தான் அல்லன்! புலவரைச் சற்றே தள்ளி அக்கட்டிலில் படுத்தான். புலவர் நாணி எழுந்தார்! சீனக்கன் ‘செல்லக்கிட' எனத் தடுத்துப் படுக்கச் செய்தான்.

வீட்டு வேலையாளால் விடியவில் செய்தி வெளிச்ச மாகியது. பழிக்கு அஞ்சிய புலவர் ஊரை விட்டு அகன்றார். ஒரு நாள் சீனக்கன் மறைந்தான்; அவன் உயிர்த் தலைவியும் உடன் இறந்தாள். இடுகாட்டில் எரியிடையே, “செல்லக்கிட என்று அன்று சொன்னாய்; இன்று எனக்குச் 'செல்லக்கிட எரியூடு புகுந்தார்.

என்று

வ்வாறு இறப்பில் ஒன்றுவதுதான் உயிர் நட்பா? இல்லை! வாழ்வியல் வள்ளுவம் அவ்வாறு கூறாது! நண்பன் இழப்புற்ற குடியின் நல்வாழ்வுக்காகக் கடனாற்றவே வள்ளுவம் ஏவும்.