பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

இளங்குமரனார் தமிழ்வளம் 6

வறுமை பண்பைக் கெடுப்பது மட்டுமில்லை. வாயால் சொல்லக் கூடாத சொல்லையும் சொல்லச் செய்யும் (W044) (கீ044)

தீய வறுமை தாயாலும் அயலான் போலப் பார்க்க வைத்து விடும் (1047) என்கிறார்.

நேற்று வந்து கொன்றது போன்ற வறுமை இன்றும் வருவதோ என ஏங்கவைத்தலைக் குறிக்கிறார்.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு?

நிரப்பு-வறுமை. நெருநல்-நேற்று.

நெருப்பினுள்

ஒருவேளை

(1048)

உறங்கினாலும் உறங்கி

விடலாம். ஆனால், வறுமை நெருப்புள் கண்ணிமை மூடலும் முடியாது எனநைகிறார்.

“நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது" (1049)

இத்தகு கொடுவறுமை, குடும்பத்தை வாட்டாமல் இருக்க அல்லவை அகற்றி, நல்லவை கொள்ளல் தொழிலாளர் கடமை யாம்.

ஊக்கமுடைமை:

மாந்தர் அனைவருக்கும் இயல்பாக அமைந்த உடைமை ஒன்றுண்டு. அவ்வுடைமை ஊக்கமுடைமை எனப்படும். உள்ளம் உடையார்க்கெல்லாம் உள்ள உடைமை அஃதாகலின் அதனை 'உள்ளமுடைமை' என்றும் கூறுவர்.

வெறும் ஊக்கம் மட்டும் பயன் தாராது. அது விலங்கின் வலிமையாகவோ நச்சுயிரின் வலிமையாகவோ போய் விடும். அதனால் அறிவோடும் கூடியதாக அவ்வூக்கம் இருத்தல் வேண்டும். அறிவிலி பண்பிலி ஆகியோர் கொண்ட ஊக்கம் அவர்க்கும் நன்மை தராததாய் பிறர்க்கும் நன்மை தராத தாய் ஒழியாமல் தீமை தருவதாகவும் இருந்து விடும். அதனால் உரன் எனப்படும் ஊக்கத்திற்கு அறிவு என்னும் பொருளும் உண்டு.

மாந்தர்ப் பொதுவாம் உடைமையாகிய ஊக்கத்தை அனை வரும் கொண்டுளரா? போற்றுகின்றனரா? உள்ளத்தில் உறுதி வந்து விட்டால் வெள்ளத்தையும் நீந்திக் கடத்தல் எளிது. ஊக்கம்