பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

255

ஊக்கமே ஒருவர்க்கு எப்போதும் தம்மகத்துள்ள அரும் பொருளாகும். அதனை இல்லாதவர் மாந்தப் பிறவியர் அல்லர்; மரப்பிறவியர் ஆவர். மக்கள் என்றும் மரம் என்றும் வழங்கப் படும் பெயர் வேறுபாட்டு அளவே வேறுபாடாம் (600).

“உரமொருவற் குள்ள வெறுக்கை அஃதில்லார் மரம்மக்க ளாதலே வேறு

உண்

ஊக்கமுடையவர்க்கு மடி என்னும் சோம்பல் டாகாது. உண்டாகவும் விடக் கூடாது. மடி என்பது மடிவுக்கு முற்பட்ட நிலை. மடித்துப் போதல் மட்கிப் போதலாகும் மட்குதல் என்பது மண்ணோடு மண்ணாகிப் போகும் நிலை யாகும்.

சோம்பாமை

ஊக்கமுடைமையை அடுத்து வைக்கப்பட்ட அதிகாரம் மடி இன்மை என்பதாகும். சோம்பல் இல்லாமை என்பது இதன் பொருள். சுறுசுறுப்பு இல்லாமை சோம்பல் என்க.

முன்னேறத் துடிப்பார்க்குச் சோம்பல் ஆகாது. சோம்பல் வாழ்வு தேம்பும் வாழ்வாதல் உறுதி. குடும்பத் தலைவன் சோம்பன் எனின் குடும்பத்தவரிடம் சுறுசுறுப்புக் காண்டற்கு இயலுமோ? சோம்பல் என்பது தொய்வு கண்ட இடத்து ஏறியமர்ந்து கொள்ளும் இயல்பினது. சோம்பன் தலையில் குருவி கூடுகட்டிக் கொண்டு வாழ்ந்தாலும் கவலைப்படான். அதனை ஓட்டவும் கைந்நீட்டான்.

66

வாழைப் பழம் சூறை போடுகிறார்கள்” என்றானாம் ஒரு சோம்பன். அடுத்த சோம்பன், “உரித்துப் போடுகிறார்களா? உரியாமல் போடுகிறார்களா?" என்று கேட்டானாம். உரித்துப் போட்டால் அப்படியே வாயைப் பிளந்து கொண்டால் போதுமே எடுக்கவும் உரிக்கவும் வாயில் போடவும் வேண்டியது இல்லையே!

"உப்புமலைமேல் உட்கார்ந்து உண்டாலும், உப்பை அள்ளிப் போட்டால்தான் சுவை என்பதொரு பழமொழி. ஊணுக்கும் சோம்பி, உழைப்புக்கு எப்படிச் சுறுசுறுப்பியாக இருப்பன்?

சோம்பன்

குடியைக் கெடுப்பான் என்கிறார் திரு

வள்ளுவர். அதனை அரிய உவமையால் குறிக்கிறார்.