பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

271

உரியனவாக வள்ளுவர் உரைத்தவற்றைக் காணலாம். நல்லது போற்றல் அல்லது அகற்றல் என்னும் இருபால் நெறிமை கொள்ளல் உலகப் பொதுமையறம். அவ்வழியே வழியாய் அறிவோம்.

இறைமை

ஆட்சிக்கு அடிப்படை வரி. வரி என்பது 'இறை' எனப் பட்டது. இறுப்பது செலுத்துவது. 'இறுசால்' என றுசால்' என இன்றும் நிலவரி செலுத்தப்படுதல் அறிக.

வரி வாங்குதல், வரிதண்டுதல். வரிதண்டுவோர் தண்டலர்; தண்டலர் தலைவர், தண்டல் நாயகர்; மாவட்ட ஆட்சி யாளர்க்குப் பின்னாளில் தண்டல் நாயகர் என்னும் பெயரீடு வந்ததே வரி வாங்குதலால்தான். “தடி தூக்கியவன் எல்லாம் தண்டல்காரன்” என்னும் பழமொழி வரி தண்டுதலை உரைக்கும்.

இறை எனப்படும் வரி தண்டியவன் இறைவன் எனப் பட்டான். அவன் வரி வாங்குவதோடு முறை செய்தலையும் மேற்கொண்டான். வலியோர் மெலியோரை வாட்டாமல் காத்ததுடன் பொதுப் பணிகள் செய்யவும், அறக்கடமைகள் புரியவும் அவன் பொறுப்பேற்றான். அதனால் மக்கள் உள்ளங் களில் இடம் பெற்றான்.

எழுத்தறிவித்தவன் இறைவன் எனப் பாராட்டப் பட்டமை போல் குடிகாவல், நாடு காவல், அறங்காவல் கொண்டவனும் இறைவன் என மதிக்கப்பட்டான். அதனால்,

66

‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்”

என்னும் இறைமாட்சிக் குறள் எழுந்தது (388)

ஆட்சியாளனுக்கு இருக்க வேண்டும் பண்புகள் இவை யெனப் பட்டியலிட்டுக் காட்டுகிறது திருக்குறள்; ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அனைவர்க்கும் வேண்டும் இயல்புகள் இவையாம்; அவையாவன;

அஞ்சாமை, கொடை, அறிவு, ஊக்கம் என்பவை நிரம்பல். சோர்வில்லாமை, கல்வி, துணிவு என்பவை உடை மை.

அறந்தவறாமை, அல்லவை அகற்றல், வீரம் தவறாமை,

மானமுடைமை என்பன சிறத்தல்.