பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம் 6

என்ற வள்ளுவர் (397). அவ்வாறு கற்க வழி கூற மறந்தார் அல்லர். அதற்காகவே ‘கேள்வி' என்பதோர் அதிகாரத்தை நாட்டினார். வைப்பு

கேள்விச்

'கற்றவனுக்கும் சல்வம் வேண்டும்; கல்லாதவனுக்கோ கேள்விச் செல்வம் கட்டாயம் வேண்டும். முன்னவன் கேள்வி வாய்ப்பை இழந்தாலும் கல்வி வாய்ப்பாவது உண்டு. ஆனால் கல்லானுக்குக் கேள்வி வாய்ப்பும் இல்லை யானால் அவன் அடையும் அறிவுதான் என்ன உண்டு' என நினைந்து, கல்வி கல்லாமைகளுக்குப் பின்னர்க் கேள்வியையும் அறிவுடைமையையும் வைத்தார் வள்ளுவர். கல்வியால் மட்டும் போதாது; கேள்வியால் மட்டும் நிரம்பாது; கல்வி கேள்வி ஆகிய இரண்டும் கூடிய வழியே சிறந்த அறிவுடைமை உண்டாம் என்பது அவர்தம் வைப்பு முறை வளமாகும்.

கனிச்சாறு

கனியாக உண்பது கல்வி என்றால், கனிச்சாறாகக் குடிப்பது கேள்வியாகும். ஒரு மணி நேரம் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தேன்; ஒரு நூறு நூல்களைக் கற்ற பயன் உற்றேன்; ஒரு மணி நேரம் அவர் பொழிவைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றேன்; காலமெல்லாம் கற்க வேண்டும் நூல்களை யெல்லாம் கற்ற பேற்றைப் பெற்றேன்; ‘அவரோடு உரையாடிக் கொண்டு உலவுவது என்பது என்ன? ஓர் அருமையான நூலகத்துடன் உவப்பாக உலா வருவது போன்றது’ என்றெல்லாம் கேள்விக் காதலர் தாம் பெற்ற சுவை நலத்தைச் சொட்டச் சொட்டக் கூறும் சொற்களே கேள்விச் சிறப்பை வெளிப்படுத்தும்.

கேட்க

கற்றவன் கேட்க' என்று கட்டளையிட்டார் அல்லர் வள்ளுவர். ‘கற்றிலன் ஆயினும் கேட்க’ என்றார் (414). ஒளியமைந்த கண்ணைப்பெற்றிருந்தும் எண்ணும் எழுத்தும் அறியாமல் புண்ணாக்கிக் கொண்ட கல்லாதவன், ஒளியமைந்த காதைப் பெற்றிருந்தும் கேள்வி நலம் பெறாமல் செவிடனும் ஆகிவிடக் கூடாதே (418). ஒரு பொறியைக் கெடுத்துக் கொண்ட அளவில் நில்லாமல் இரண்டாம் பொறியையும் அதன் மேலேயும் மேலேயும் கடுத்துக் கொள்ளக் கூடாதே என்னும் இரக்கத்தால் ‘கற்றிலன் ஆயினும் கேட்க, என்றார்.

ம்